சென்னை: தியேட்டர் பகிர்வில் அஸ்திரம் படத்திற்கு போதுமான அளவு திரையரங்குகள் கிடைக்காத காரணத்தால் அஸ்திரம் பட ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் படம் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன சண்முகமணி தயாரிப்பில் க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ளது அஸ்திரம். ஷாம் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் இயக்கியுள்ளார். நடிகர் ஷாம் கடைசியாக துணை நடிகராக நடித்த படம் வாரிசு ஆகும். அதற்கு பின்னர் அவர் மீண்டும் கதாநாயகனாக அஸ்திரம் படத்தில் நடித்து உள்ளார். கதாநாயகியாக புதுமுக நடிகை நிரா நடித்துள்ளார்.இவர்களுடன் நிழல்கள் ரவி, ஜீவா ரவி, அருள் டி.சங்கர் மற்றும் அறிமுக நடிகர் ரஞ்சித் ஆகியோர் நடித்துள்ளார்கள்.
இப்படம் நாளை மார்ச்-7ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியிட திட்டமிடப்பட்டது. நாளை படம் வெளியாகும் என்பதற்காக படக்குழு பல லட்சங்களை செலவு செய்து விளம்பரப்படுத்தியது.
இருப்பினும் படம் வெளியாகும் தேதியை மாற்றியுள்ளது படக்குழு. அத்துடன் இந்த படம் அதிகளவில் ரசிகர்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக, படக்குழுவினர் அதிக திரையங்குகளில் படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காகவும் இன்னொரு நாளில் படத்தை திரையிட முடிவு செய்துள்ளனர்.
முன்னதாக, இப்பட காட்சிகள் பத்திரிக்கையாளர்களுக்கு திரையிடப்பட்ட போது படம் பார்த்த அனைவரும் படம் மிகச்சிறப்பாக வந்துள்ளதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் இந்த வாரம் அதிக அளவில் சில படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் ‘தியேட்டர் பகிர்வில் ‘அஸ்திரம் படத்திற்கு போதுமான அளவு திரையரங்குகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் அஸ்திரம் பட தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அஸ்திரம் பட வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}