ஊட்டி: ஒற்றை யானை சுற்றித் திரிவதால் தொட்டபெட்டா காட்சி முனை பகுதிக்கு, சுற்றுலா பயணிகள் இன்று ஒரு நாள் மட்டும் செல்ல தடை விதித்துள்ளது தமிழ்நாடு வனத்துறை.
தமிழகத்தில் கோடை காலம் துவங்கி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் தொடங்கி வெயிலின் தாக்கம் மேலும் உச்சமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் குளுமையான இடங்களில் சுற்றுலா செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.அதே சமயத்தில் கோடை விடுமுறை நாள் என்பதாலும் பெருமளவில் மக்கள் சுற்றுலா செல்ல திட்டமிட்டு வருகின்றனர். அந்த வகையில் மக்கள் இயற்கையின் அழகை ரசிப்பதற்காகவும், குளுமையான சூழ்நிலையை கொண்டாடுவதற்காகவும் ஏராளமான மக்கள் ஊட்டி செல்கின்றனர்.

இதற்கிடையே சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காகவும், மாசுக்கட்டுப்பாட்டை குறைக்கவும், ஊட்டி வரும் சுற்றுலாப் பயணிகளிடையே தமிழக அரசு இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்திற்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக வனத்துறை.
அதன்படி, தொட்டபெட்டா காட்சி முனை பகுதிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏனெனில் ஒற்றை காட்டி யானை அப்பகுதிகளில் உலா வருவதால் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.
தொட்டபெட்டா காட்சி முனைப் பகுதி அருகே ஒற்றை காட்டு யானையை தஞ்சம் அடைந்துள்ளதால் தொடர்ந்து ட்ரோன் மூலம் கண்காணித்து வருகிறது வனத்துறை. மேலும் இந்த யானையை பிடித்து வனப்பகுதிக்குள் அனுப்ப 40 பேர் கொண்ட குழு அமைத்து தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.
பெற்றோரை விடப் பேறு பெற்றவள் - என் ஆச்சி!
காதல்!
தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும் இந்திய விவசாயிகளுக்கான குரல்: முதல்வர் முக ஸ்டாலின்!
ஆஹா சூப்பர் ருசி -- மரவள்ளி கிழங்கு சுழியம்!
சுவையான மோர்க்குழம்பு.. வச்சு சாப்பிட்டுப் பாருங்க.. மறக்கவே மாட்டீங்க!
மாதவிடாய் வலியா.. இடுப்பு வலியா.. இருக்கவே இருக்கு பாரம்பரிய வைத்தியம்!
நன்றியுணர்வு மலரட்டும்.. Gratitude in Bloom: Don't Take Your Parents for Granted
வடதமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு இருக்காம் மக்களே: வானிலை ஆய்வு மையம் தகவல்!
ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரம்.. புதிய தாக்குதலில் இறங்கிய ரஷ்ய ராணுவம்
{{comments.comment}}