அடிலெய்ட்: பெர்த் நகரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் பிரமாண்ட வெற்றியைப் பெற்று அசத்திய இந்தியா, அடிலெய்டில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் பரிதாபமான தோல்வியைத் தழுவியது.
இந்தியாவின் பேட்டிங் ஒரு பக்கம் கைவிட்ட நிலையில் பவுலர்களும் மோசமாக பந்து வீசி இந்தியாவுக்குப் பெரும் தோல்வியைப் பெற்றுக் கொடுத்து விட்டனர்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் தற்போது ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடந்தது. அதில் இந்தியா அபாரமான வெற்றியைப் பெற்று அசத்தியிருந்தது.
இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் என இரண்டுமே அந்த போட்டியில் அபாரமாக இருந்தது. இந்த நிலையில் அடிலெய்ட் நகரில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் அப்படியே நிலைமை தலைகீழாக மாறியது. பேட்டிங், பவுலிங் இரண்டிலுமே இந்தியா பெரும் சொதப்பலை செய்து விட்டது. போட்டி முழுவதும் ஆஸ்திரேலியாவின் கையே ஓங்கிக் காணப்பட்டது.
முதலில் பேட் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்ஸை 180 ரன்களுக்கு இழந்தது. இதையடுத்து ஆடிய ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 337 ரன்களைக் குவித்தது. இந்திய பந்து வீச்சாளர்களை நையப்புடைத்து ரன்களைக் குவித்தது ஆஸ்திரேலியா. அதைத் தொடர்ந்து 2வது இன்னிங்ஸை ஆடிய இந்தியா முதல் இன்னிங்ஸை விட மோசமாக ஆடி 175 ரன்களில் சுருண்டு போனது. இதனால் 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலபமான இலக்குடன், 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 3.2 ஓவர்களில் 19 ரன்களைக் குவித்து அபார வெற்றியைப் பெற்றது.
10 விக்கெட் வித்தியாசத்தில் 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரலியா, இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமன் அடைந்துள்ளது.
அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் இந்தியா மிக மோசமான தோல்வியைச் சந்தித்திருப்பது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவின் பவுலர்களின் செயல்பாடுகள் ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}