-ஆ.வ. உமாதேவி
தமிழக அரசின் உத்தரவுப்படி இன்று சனிக்கிழமை, விடுமுறை என்பதால் நேற்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் குழந்தைகள் தின விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது
முதல் முதலாக குழந்தைகளுக்கு கேக் மற்றும் முதலமைச்சரின் வாழ்த்து அட்டை வழங்கப்பட்டது.
அனைத்து பள்ளிகளிலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் மிகவும் ஆர்வமாகவும் மகிழ்ச்சியாகவும் கலந்து கொண்டனர்.
பல முக்கிய நிகழ்வுகளை கொண்டாடும் நமது பள்ளியிலும் நேற்று குழந்தைகள் தின விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது

பல மாணவர்கள் பேச்சுப் போட்டியில் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) கலந்துகொண்டு குழந்தைகள் தின விழா, பண்டித ஜவஹர்லால் நேரு, காமராசர், கக்கன் போன்ற தலைப்புகளில் பேசி அசத்தினர்.
முதல் வகுப்பு மாணவர்கள் தங்கள் மழலை மொழியில் தோசையம்மா தோசை, மாம்பழமாம் மாம்பழம், அதோ பாரு காரு, உருளைக்கிழங்கு செல்ல குட்டி, குள்ள குள்ள வாத்து போன்ற பாடல்களை பாடி அனைவரையும் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடித்தனர்.
பல மாணவர்கள் நேருவின் உருவத்தை ஓவியமாக வரைந்து, கண்ணுக்கும் மனதிற்கும் குளிர்ச்சியூட்டினர்.
அனைத்து மாணவர்களும் நடனப் போட்டியில் கலந்து கொண்டு, உற்சாகமாக நடனமாடி அனைவரையும் இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்தனர். விளையாட்டுப் போட்டிகள் மற்றும் சிலம்பம் ஆகிய கலைகளை நிகழ்த்தி காட்டினர்.

முதல் வகுப்பு G. மதன் "குழந்தை" என்னும் தலைப்பில் மழலை மொழியில், கவிதை சொன்னதும் "சூடா மெத்துன்னு
பன்ரொட்டி" பாடலில் "முதலமைச்சர் தந்த பன்ரொட்டி, மகிழ்ச்சியைத் தரும் பன்ரொட்டி" என்ற வரிகளை பாடியது அனைவரையும் கவர்ந்தது.
இரண்டாம் வகுப்பு மாணவி, R. ஜியானா "காமராசர்" என்ற தலைப்பில் உடல் அசைவுகளுடன் சைகைகளுடன் பேசியது, அனைவரையும் கவனிக்க வைத்தது.

குழந்தைகளுக்கு, அவர்களுக்கு உரிய நாளாக முழுமையாக கொடுத்து, அனுபவிக்க வாய்ப்பு கொடுத்தது அவர்களுக்கு என்றும் மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.
"முயற்சி திருவினையாக்கும்" என்பதற்கு ஏற்ப முயற்சித்து, அனைத்து போட்டிகளிலும் பங்கு கொண்டு விழாவை சிறப்பாக்கிய குழந்தைகள் அனைவருக்கும் இனிப்பும் பரிசும் வழங்கப்பட்டது.
மொத்தத்தில் நேற்றைய "குழந்தைகள் தின விழா" என்றும் நினைவை விட்டு நீங்காத ஒரு விழா.
(ஆ.வ. உமாதேவி, இடைநிலை ஆசிரியர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனியைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியி் பணியாற்றுகிறார்)
வங்கக்கடலில் உருவாகிறது 'அக்வான்' புயல்; தீவிரப் புயலாக வலுப்பெற வாய்ப்பு – இந்திய வானிலை மையம்
அரும்புகளுக்கான ஒரு நாள்!
உயர்வுகள் காணத் துடிக்கும் வெண்ணிலாக்கள்!
நீயும் ஒரு குழந்தையாக!
வற்றல் குழம்பு!
SAVE THE TREES
மேகதாது அணை கட்டுவது ஏன்? கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் புதிய விளக்கம்
மேகதாது அணை விவகாரம்: முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் புகார்தாரர் தற்கொலை: வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்
{{comments.comment}}