- மடிப்பாக்கம் பிரபாவதி
நல்லெண்ணையை நமதில்லை என
ஊற்றிக் காய்ந்தபின்
சுண்டைக்காய் வற்றல் கருக்கித் தாளித்து
எடுத்து வைத்து
புளிச்சாருடன் மஞ்சத்தூள் கல்லுப்பும்
சாம்பார் பொடியும் கலந்து

கடுகும் பெருங்காயமும் கறிவேப்பிலையும்
மணக்கத் தாளித்து
கரைத்தச் சாற்றை
சடசடவென சத்தம் கேட்க ஊற்றி
சிம்மில் வைத்து
சுண்டச் சுண்டக் குறுகச் செய்தபின்
கிளறிப்பார்த்து வாசனை வாசல்வரை வந்த பின்னே
இறக்கி எடுத்துப் பரிமாற
இதயம் வரை ருசித்திடுமே
(எழுத்தாளர் பிரபாவதி, சென்னை மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். பேக்கிடெர்ம் டேல்ஸ் (publishers) மூலம் ஏனையோருடன் சேர்ந்து 42 புத்தகங்களில் எழுதியிருக்கிறார். ராணி, விகடகவி, மலர்வனம், லேடீஸ் ஸ்பெஷல், விருட்சம், இறகுகள், தமிழ்நாடு இ பேப்பர், மின் கைத்தடி உள்ளிட்டவற்றில் இருபத்தி ஐந்துக்கும் மேல் சிறுகதைகள் எழுதியுள்ளார். தனது மகளுடன் இணைந்து ஒரே கதையை ஆளுக்கொரு அத்தியாயமாக எழுதி 2 புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். சின்னஞ்சிறு கதைகள் என்ற சிறுகதை தொகுப்பும், Boomer to GenZ அலப்பறைகள் என்ற 35 பகுதிகள் அடங்கிய நாவலும் எழுதியுள்ளார்.)
வற்றல் குழம்பு!
SAVE THE TREES
மேகதாது அணை கட்டுவது ஏன்? கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் புதிய விளக்கம்
மேகதாது அணை விவகாரம்: முதலமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் புகார்தாரர் தற்கொலை: வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்
வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி; நவம்பர் 16ல் புயலாக வலுப்பெற வாய்ப்பு!
பெற்றோரைப் பேணு!
அப்பா – சொல்லப்படாத அன்பின் முகவரி.. ரம்யாவின் கவிதைத் தோட்டம் (13)
நதியில் மிதக்கும் இலைகளின் பயணம்!
{{comments.comment}}