சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது

Aug 15, 2025,12:17 PM IST

சென்னை : நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பிறகு நடந்த விருது வழங்கும் விழாவில் சிறந்த மாநகராட்சிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆவடி மற்றும் நாமக்கல் மாநகராட்சிகளுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.


கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதையடுத்து தகைசால் தமிழர் விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.  தகைசால் தமிழர் விருதையும், ரூ.10 லட்சத்திற்கான காசோலையை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீனுக்கு  வழங்கி கௌரவித்தார்.  


பிறகு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சுதந்திர போராட்ட வீரர்களுக்கான குடும்ப ஓய்வூதிய உயர்வு, மலைப்பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் உள்ளிட்ட 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். சுதந்திர நாளில் முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை 1974ஆம் ஆண்டு பெற்றுத் தந்தவர் கலைஞர் கருணாநிதி என்று தெரிவித்தார். நாடு முழுவதும் அனைத்து மதம், அனைத்து மொழி பேசும் மக்களும் இணைந்து பெற்றுத் தந்ததுதான் இந்த சுதந்திரம் என்றும், தமிழ்நாட்டில் தற்போது உள்ள விடுதலை போராட்ட வீரர்களின் சிலைகள், மணிமண்டபங்கள் திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டவை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.




மாநில அரசு விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு தற்போது வழங்கி வரும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 22,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார். மேலும், 2வது உலகப் போரில் பங்கேற்ற வீரர்களின் கைம்பெண்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர நிதியுதவி ரூ.8,000 ஆக உயர்த்தப்படுகிறது என்று தெரிவித்தார். ஓட்டுநர் பயிற்சி பெற மாநில அளவில் ஒரு பயிற்சி மையம், மண்டல அளவில் இரண்டு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என்றும், 2ஆம் உலகப்போரில் பங்கேற்றவர்களுக்கான ஓய்வூதியம் ரூ.15,000 ஆக உயர்த்தப்படுகிறது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். மேலும் மலைப்பகுதிகளில் கட்டணமில்லா பேருந்து பயணம் மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்று கூறினார்.


இதேபோல், தியாகிகளின் குடும்பங்களுக்கு தற்போது வழங்கி வரும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ.12,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், சமூகம், பொருளாதாரம் என இரண்டிலும் வளர்ச்சி அடைவதே திராவிட மாடல் வளர்ச்சி எனக் கூறினார். கடந்த 75 ஆண்டுகளில் அதிகாரப் பகிர்வில் மாநில அரசின் பங்கு குறைந்து வருகிறது என்றும், மத்திய-மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகாரம், நிதிப் பகிர்வை சட்டப்பூர்வமாக மீட்டெடுக்கும் நேரம் வந்துவிட்டது என்றும் கூறினார். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய நகராட்சி, மாநகராட்சிகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.


சிறந்த மாநகராட்சி :


முதல் பரிசு - ஆவடி

2வது பரிசு - நாமக்கல்


சிறந்த நகராட்சி :


முதல் பரிசு - ராஜபாளையம்

2வது பரிசு - ராமேஸ்வரம்

3வது பரிசு - பெரம்பலூர்


சிறந்த பேரூராட்சி :


முதல் பரிசு - காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர்

2வது பரிசு - திருச்சி மாவட்டம் காட்டுப்புதூர்

3வது பரிசு - திண்டுக்கல் மாவட்டம் நத்தம்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பிரதமர் மோடி அறிவித்த டபுள் தீபாவளி.. ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னெல்லாம் மாற்றம் இருக்கும்?

news

சுதந்திரம் காப்போம்!

news

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்று சவரனுக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

news

சிறந்த மாநகராட்சியாக ஆவடி, நாமக்கல் தேர்வு.. சென்னை சுதந்திர தின விழாவில் விருது

news

கோகுலாஷ்டமி.. ஆடி சனிக்கிழமையில்.. கார்த்திகை நட்சத்திரத்துடன் இணைந்து வருவதால் விசேஷம்!

news

சுதந்திரம்.. ஆன்மீகம்.. இரண்டுக்கும் தொடர்பிருக்கு தெரியுமா?

news

தலைகொடுத்து தாயகத்தை மீட்டுத்தந்த.. தியாகத் தலைவர்களுக்கு.. நன்றி சொல்வோம்!

news

அணு ஆயுதங்களைக் காட்டி இந்தியாவை யாரும் மிரட்ட முடியாது.. பிரதமர் மோடி எச்சரிக்கை

news

தனியார் துறையில் முதல் வேலை பெறுவோருக்கு ரூ. 15,000.. புதிய திட்டத்தை அறிவித்தார் பிரதமர் மோடி

அதிகம் பார்க்கும் செய்திகள்