அயோத்தி: அயோத்தில் ராமர் கோவிலில் உள்ள ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. புன்னகை பூத்த நிலையில் காணப்படும் பால ராமரின் சிலை சிறப்புப் பூஜைகளுக்குப் பிறகு மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, 11 நாள் விரதம் இருந்து பல புண்ணிய பூமிகளில் இருந்து தீர்த்தம் கொண்டு வந்து இன்றைய பூஜையில் கலந்து கொண்டார்.
500 ஆண்டுகளுக்கு பின்னர் ராம பிரானுக்கு விழா நடைபெறுவது காணக்கிடைக்காத பெரும் பாக்கியமாக பலர் கருதி இவ்விழாவில் கலந்து கொண்டு ராமபிரான் அருள் பெற்று வருகின்றனர். இந்த வரலாற்று சிறப்பு மிக்க இந்த தருணத்தில் நாட்டு மக்கள் அனைவரும் மாலையில் 5 அகல் விளக்கு ஏற்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அரசியல் பிரமுகர்கள், திரை பிரலங்கள், முக்கிய பிரமுகர்கள் என 7000த்திற்கும் மேற்பட்டவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர். இவ்விழா மிகவும் பிரம்மாண்டமாக எட்டு திக்கும் மேளதாள வாத்தியங்கங்கள் முழங்க மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மனிதர்கள் காணக்கூடிய சொர்க்க பூமியாக அயோத்தி மாநகரம் இன்று விளங்குகிறது.

பிரமாண்ட கோவிலில் பிரதிஷ்டை எனப்படும் புனித நிகழ்வு தற்போது நடந்து முடிந்துள்ளது. கர்ப்ப கிரஷத்தில் உள்ள ராம விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு முடி இருந்த ராமர் கண்கள் திறக்கப்பட்டு, உயிர் பெறும் முக்கிய நிகழ்வாகும் இது. 500 ஆண்டுகளுக்கு முன்னர் சிறப்புடன் இருந்த அயோத்தி இன்று புத்துயிர் பெற்றுள்ளது. தசரதச் சக்கரவர்த்தியின் மகன் ராமர். ராமர் பிறந்த இடத்தில்தான் இந்தக் கோவில் இப்போது கட்டப்பட்டுள்ளது. மக்கள் இதை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
ராமர் கோவில் பண்டைய நகர கட்டிடக்கலையின் படி அமைக்கப்பட்டுள்ளது. 380 அடி நீளமும் 280 அடி அகலம் 161 அடி உயரம் என சுமார் 27 ஏக்கர் நிலத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 3 மாடி அடுக்குகளும் 398 தூண்களும் 44 கதவுகளும் கொண்டுள்ளது. ஐந்து மண்டபங்களும் அமைக்கப்பட்டுள்ளன. நுழைவாயில் கிழக்குப் புறம் அமைந்துள்ளது. சிங்க துவாரம் வழியாக 32 படிக்கட்டுகளைக் கடந்து பக்தர்கள் உள்ளே வரவேண்டும்.
சாய்வுப்பாதையும் அதுபோல அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் இரும்பு பயன்படுத்தப்படவில்லை. கோயில் வளாகத்தில் சூரிய பகவான், பகவதி அம்மன், விநாயகர், சிவன் ஆகியோருக்கு தனியே கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. அன்னை அன்னபூரணி கோவில் வட திசையில் அமைந்துள்ளது. தென்புறத்தில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
கோயில் அடித்தளம் 14 மீட்டர் தடிமனான ரோலர் காம்பாக்ட் கான்கிரீட் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. ஈரப்பதத்தில் இருந்து பாதுகாக்க கிரானைட் கற்களால் 21 அடி உயரம் தரைத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}