"மதுக் கடைகளை மூடுங்க.. அரசியலுக்கு இழுக்காதீங்க.. தாங்க மாட்டீங்க".. பாலாஜி முருகதாஸ் அதிரடி!

Mar 26, 2023,04:13 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் மதுக் கடைகளை முழுவதுமாக மூட முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிக் பாஸ் போட்டியாளர் பாலாஜி முருகதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதை விட முக்கியமாக, என்னை  அரசியலுக்குள் இழுக்காதீர்கள்.. தாங்க மாட்டீங்க என்றும் அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 4வது சீசனின் முக்கிய போட்டியாளராக விளங்கியவர் பாலாஜி முருகதாஸ். அதி ஆவேசமாக போட்டியில் பங்கேற்ற அவர் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார். ஆனாலும் இவருக்கு ஆதரவும் அதிகமாக இருந்தது. அப்போட்டித் தொடரில் அவர் 2வது இடத்தைப் பிடித்தார். இதைத் தொடர்ந்து நடந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முதலிடத்தைப் பிடித்தார். 

பெரிய அளவில் சினிமாவில் வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆள் அட்ரஸே இல்லாமல்தான் இருக்கிறார். இந்த நிலையில் திடீரென நேற்று இரவு அவர் போட்ட டிவீட் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலினை டேக் செய்து ஒரு டிவீட் போட்டிருந்தார் பாலாஜி முருகதாஸ். அதில், டியர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.. தயவு செய்து டாஸ்மாக்கை மூடுங்க. ஆன்லைன் ரம்மியுடன் ஒப்பிடுகையில் அதை விட அதிக அளவிலான மக்களையும், உயிரையும் குடித்துக் கொன்று வருகிறது டாஸ்மாக் கடைகள் என்று கூறியிருந்தார் பாலாஜி முருகதாஸ்.



அதன் தொடர்ச்சியாக இன்னொரு டிவீட் போட்டிருந்தார். அதில்,  தமிழ்நாட்டில் என்னைப் போன்று மதுவுக்கு குடும்பத்தை இழந்த பல அனாதைகள் உள்ளனர்.  என்னை அரசியலுக்குள் இழுக்காதீர்கள்.. உங்களால் என்னை கையாள முடியாது என்று கூறியுள்ளார் பாலாஜி முருகதாஸ்.

முதல்வரை டேக் செய்த இரண்டு டிவீட்டுகளில் ஒன்றில் முதல்வருக்கு  கோரிக்கையும், இன்னொன்றில் எச்சரிக்கையும் விடுத்து பாலாஜி முருகதாஸ் எழுதியருப்பது சலசலப்பையும், பரபரப்பையும் கிளப்பியுள்ளது. ஏன் இப்படி ஒரு டிவீட்டை திடீரென பாலாஜி முருகதாஸ் போட்டார் என்று பலரும் குழப்பமாகியுள்ளனர். 

சமீபத்திய செய்திகள்

news

கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

news

இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு

news

அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!

news

கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள்.. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்