"கேலி பண்றாங்க.. எங்களுக்கு பென்ஷன் கொடுங்க".. வழுக்கையால் பாதிக்கப்பட்டோர் அதிரடி!

Jan 09, 2023,11:25 AM IST
ஹைதராபாத்: வழுக்கைத் தலை கொண்டோர் சேர்ந்து தெலங்கானாவில் ஒரு சங்கம் அமைத்துள்ளனர். பல்வேறு மன உளைச்சல்களுக்கு தாங்கள் ஆளாவதால், அரசு தங்களுக்கு மாதந்தோறும் ரூ. 6000 ஓய்வூதியமாக தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம் சித்திப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தங்கலப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த வழுக்கையால் பாதிக்கப்பட்ட சிலர் சேர்ந்து குழுவாக இயங்கி வருகின்றனர்.இவர்கள் மாநில அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர்.

அதில் முக்கியமானது, தங்களுக்கு வழுக்கைத் தலை இருப்பதால் பலரின் கேலி கிண்டல்களுக்கு இலக்காகிறோம். இதனால் மன உளைச்சல் ஏற்படுகிறது.  இதனால் சரியான முறையில் வேலைக்கும் போக முடிவதில்லை. எனவே அரசு எங்களுக்கு மாதந்தோறும் ரூ. 6000 ஓய்வூதியமாக தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.



சங்கராந்தியையொட்டி இந்த ஓய்வூதியத்தை அறிவித்து எங்களை அரசு மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஜனவரி 5ம் தேதி இவர்கள் தங்களது ஊரில் கூட்டம் ஒன்றை நடத்தினர். அடுத்து சங்கராந்தி அன்றும் கூட்டம் போடவுள்ளனராம்.  அப்போது மேலும் பலர் தங்களுடன் வந்து இணைவார்கள் என்று இவர்கள் தெரிவித்தனர்.

இந்த அமைப்பைச் சேர்ந்த அஞ்சி என்பவர் கூறுகையில், பலரும் எங்களது தலையைப் பார்த்து சிரிக்கிறார்கள். முடி  கொட்டிப் போனால் அதற்கு நாங்களா பொறுப்பு..  இது இயற்கையாக நடப்பது.. இப்படிக் கேலி செய்வதால் மனம் வலிக்கிறது. எதற்கெடுத்தாலும் எங்களை கேலி செய்கிறார்கள் என்றார் விரக்தியாக.

சமீபத்திய செய்திகள்

news

பால் முதல் மின்சாரம் வரை...110 விதியின் கீழ் முதல்வர் விஜய் இன்று வெளியிட்ட 6 அறிவிப்புக்கள்

news

ஒரே நாளில் மதுவிலக்கு கொண்டு வர முடியும்...அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சால் அதிர்ந்த சட்டசபை

news

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அறிவிப்புகள்: இலவச ஸ்கூட்டர், பஸ்களில் இலவச பயணத் திட்டம்

news

கொளத்தூர் தேர்தல் வழக்கு: தீர்ப்பை தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

news

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்...சம்பள உயர்வு, தீபாவளி முன்பணம் அறிவிப்பு

news

சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் இருக்கை மாற்றம்...மாணிக்க தாகூர் சொன்ன பதில்

news

நேபாள பெருவெள்ளம்: 903 பேர் பலி; 4,247 பேர் மாயம்...அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்

news

அரசு ஊழியர்கள் கையில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்: கன்னியாகுமரி கலெக்டர் அதிரடி உத்தரவு

அதிகம் பார்க்கும் செய்திகள்