சென்னை: கன்னடத் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரான கேவிஎன் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய்யின் கடைசி படம் உருவாகவுள்ளது.
விஜய்யின் கடைசிப் படத்தை தமிழ்த் தயாரிப்பாளர் யாராவது தயாரிப்பார்கள் என்று பார்த்தால் கன்னடத் தயாரிப்பாளருக்கு அந்தப் படம் போயுள்ளது ஒரு பக்கம் ஏமாற்றத்தைக் கொடுத்தாலும் கூட, ரசிகர்கள் இந்த அறிவிப்பைக் கொண்டாடி வருகின்றனர்.
விஜய்யின் 69வது பட அறிவிப்பை கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் வித்தியாசமான முறையில் வெளியிட்டுள்ளது. படம் குறித்த இதர விவரங்கள் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் இசையமைப்பாளராக அனிருத் புக் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. சிம்ரன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. பிற விவரங்கள் நாளை தெரிய வரலாம்.

கேவிஎன் புரடக்ஷன்ஸ் என்பது பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட தயாரிப்பு, நிதி மற்றும் விநியோக நிறுவனமாகும். தளபதி 69 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை தயாரிக்கும் இந்த நிறுவனத்தை வெங்கட் கே நாராயண் மற்றும் நிஷா வெங்கட் கோணங்கி ஆகியோர் இணைந்து நடத்தி வருகின்றனர்.
2021ம் ஆண்டு முதல் இந்த நிறுவனம் படத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. சக்கத் என்ற படத்தை முதலில் இது தயாரித்து வெளியிட்டது. இதையடுத்து பைடூ லவ் என்ற படத்தைத் தயாரித்தனர். புதிய திறமையாளர்களுக்கு வாய்ப்பளிப்பதே தங்களது முதல் நோக்கம் என்று இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொகரு மற்றும் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்திற்கு இந்த நிறுவனம் பைனான்ஸும் செய்துள்ளது. விக்ராந்த் ரோனா, 777 சார்லி, சப்தசாகரச்சே எல்லோ, அவதார புருஷா பார்ட் 1, 2, தொட்டாபுரி பார்ட் 1, 2 ஆகிய படங்களுக்கும் இந்த நிறுவனம் பைனான்ஸ் செய்துள்ளது.
தற்போது விஜய் படத்தைத் தயாரிப்பதன் மூலம் இந்திய சினிமா உலகில் கேவிஎன் புரடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு மிகப் பெரிய வெளிச்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்த நிறுவனம் உள்ளது. சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக தயாராகியுள்ள கங்குவா படத்தை கர்நாடகத்தில் திரையிடும் உரிமையை கேவிஎன்தான் வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்துக்கு பைனான்ஸும் கேவிஎன் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு.. எதுக்காக?
விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்பவர்களுடன் கூட்டணி: தவெக கூட்டத்தில் தீர்மானம்
சூடுபிடிக்கும் சட்டசபை தேர்தல் பணிகள்.. டிசம்பர் 15 முதல் அஇஅதிமுக விருப்பமனு!
சுப்ரியா சாகு அவர்களுக்கு ஐ.நா. விருது.. தமிழ்நாடு பெருமை கொள்கிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
பாரதி இன்று இருந்திருந்தால், பிரதமருக்கு வாழ்த்துப் பாடல் பாடியிருப்பார் - தமிழிசை சௌந்தரராஜன்
சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டத்துக்கு வாங்க... பாமக நிர்வாகிகள் நேரில் சென்று தவெகவிற்கு அழைப்பு
98 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் எழும்.. ஜப்பான் அரசு வெளியிட்ட எச்சரிக்கை.. பின்னணி என்ன?
தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்... இன்றைய விலை நிலவரம் இதோ
{{comments.comment}}