பெங்களூரு: பெங்களூரு டாக்டர் ராஜ்குமார் சாலையில் உள்ள மின்சார வாகன ஷோரூமில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் 20 வயதுப் பெண் பரிதாபமாக பலியானார். 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகி நாசமாகின.
இன்று மாலை இந்த பெரும் தீவிபத்து நடந்தது. ஷோரூமில் உள்ள மின்சார மோட்டார் சைக்கிள்கள் பிரிவில் ஒரு ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு ஸ்கூட்டரில் இருந்த பேட்டரிகள் இதனால் வெடித்து தீப்பிடித்துக் கொண்டது. இதையடுத்து ஷோரூம் முழுக்க தீ பரவியது.

தகவல் அறிந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து போராடித் தீயை அணைத்தன. இந்த விபத்தில் அந்த ஷோரூமில் சேல்ஸ் எக்சிகியூட்டிவாக பணியாற்றி வந்த பிரியா என்ற இளம் பெண் பரிதாபமாக தீயில் கருகி உயிரிழந்தார். ஷோரூமில் இருந்த 5 ஊழியர்கள் துரிதமாக வெளியேறி உயிர் தப்பினர்.
இந்த விபத்தில் ஷோரூமில் இருந்த 40க்கும் மேற்பட்ட மின்சார வாகனங்கள் தீக்கிரையாகி விட்டன. தீவிபத்தைத் தொடர்ந்து அக்கம் பக்கத்து கடைகளில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
மின்சார வாகனங்களை விற்பனை செய்யும் இடங்களில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்த தீவிபத்து உணர்த்தியுள்ளது. விபத்து குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
SIR வேண்டாம் என்று திமுக உச்ச நீதிமன்றம் சென்றால், அதிமுக SIR வேண்டும் என செல்வோம்: ஜெயக்குமார்
தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை விஜய் வலியுறுத்தல்!
கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்: சென்னை தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை!
அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்.. நவ., 6ல் அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழ்நாடு அரசு!
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்!
கோவை விமான நிலையம் அருகே அதிர்ச்சி... மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
'NO' சொல்ல தயக்கமா?.. தயங்காமல் சொல்லுங்க.. சொல்ல வேண்டிய இடத்தில்!
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே.. இரவானால் பகல் ஒன்று வந்திடுமே!
{{comments.comment}}