பெங்களூரு: மக்களே உஷார்.. நீங்கள் வெளியே செல்லும்போது அங்கு சூழ்நிலை எப்படி உள்ளது என்பதை அறியாமல் அசட்டையாக இருந்தால் உங்களுக்கும் இந்த ஜோடி சந்தித்த பிரச்சினைதான் ஏற்படும்.
ஹோட்டலில் தங்க நேரிடுகிறதா.. அறைகள், பாத்ரூம் போன்ற இடங்களில் ரகசிய கேமராக்கள் உள்ளதா என்பதை அறிந்து செயல்படுங்கள். கலிகாலம் என்பதற்கு ஏற்ப நாட்டில் பணத்திற்காக பல
வன்மங்கள் அரங்கேறி வருகின்றன .அந்த வரிசையில் தற்போது பெங்களூரில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு ,கெங்கேரி மெயின் சாலையில் கெஞ்சன்புரா பகுதியில் ஹோட்டலுடன் கூடிய விடுதி ஒன்று உள்ளது. நயனா என்பவர் அந்த விடுதியின் உரிமையாளர் ஆவார். இவருடைய கணவர் கிரண். நயனாவின் உறவினரான ஒரு பெண் எம் பி ஏ படித்து வருகிறார். அந்தப் பெண் நயனாவின் ஹோட்டலுக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.
அந்தப் பெண் அடிக்கடி தனது காதலனை ஹோட்டலுக்கு அழைத்து வந்துள்ளார். அவர்கள் இருவரும் ஹோட்டல் அறையில் திருட்டுத்தனமாக உல்லாசமாக இருந்து வந்தனர். இது வாடிக்கையாக நடந்து வந்துள்ளது. இதனை அறிந்த கிரண் காதல் ஜோடி தங்கும் அறையில் அவர்களுக்கே தெரியாமல் ரகசிய கேமராவை பொருத்தியுள்ளார். காதல் ஜோடி அந்தரங்கமாக இருக்கும் காட்சிகளை பதிவு செய்துள்ளார்.
அதன் பின்னர் இந்த வீடியோவை மாணவிக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பியுள்ளா். தனக்கு பணம் தர வேண்டும். இல்லாவிட்டால் உறவினர்களுக்கு அனுப்பி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். அதிர்ச்சி அடைந்த மாணவி என்ன செய்வது என அறியாமல் குழம்பிப் போய் கடைசியில் தனது பெற்றோர்களிடம் நடந்த தவறை எடுத்துக் கூறினார்.
இதைக் கேட்டு அதிர்ந்து போன பெற்றோர், சந்திரா லேஅவுட் காவல் நிலையத்தில் கிரண் மீது புகார் கொடுத்தனர். இதன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி கிரணைக் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்ததாக நயனாவும் கைது செய்யப்பட்டார்.
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது: கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவிப்பு!
வினாத்தாள் கசிவுக்கு 10 ஆண்டு சிறை ரூ.10 கோடி அபராதம்: தேர்வு சீர்திருத்த மசோதா நிறைவேற்றம்
முட்டாள்கள்...ராகுல் காந்தியின் பேச்சால் கொந்தளித்த பாஜக எம்.பி.,க்கள்
பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் வாரம் ஒரு நாள் சிக்கன் பிரியாணி
2031ல் தமிழகத்தில் பாமக ஆட்சி : பாமக பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு
டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு பிடிவாரண்ட்: தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!
டாஸ்மாக் குடோன்கள் மற்றும் மதுபான ஆலைகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
பாமக தலைவராக மீண்டும் டாக்டர் அன்புமணி தேர்வு.. வடிவேல் ராவணன், திலகபாமாவுக்கும் மீண்டும் பதவி
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு உட்பட 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு!
{{comments.comment}}