பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்ததற்காக.. 20 வயது இளைஞனை அடித்துக் கொன்ற கும்பல்

Feb 03, 2023,03:25 PM IST
பெங்களூரு: பெங்களூருவில், 20 வயது இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டார்.. அவர் செய்த "தவறு".. ஒரு பெண்ணுடன் அமர்ந்து தனிமையில் பேசிக் கொண்டிருந்ததே!



இந்த கொடூரச் சம்பவம் தொடர்பாக அனில், லோஹித், பாரத், கிஷோர் என நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளதாக பெங்களூரு வடக்கு துணை போலீஸ் கமிஷனர் தேவராஜ் கூறியுள்ளார். கொல்லப்பட்ட நபரின் பெயர் கோவிந்தராஜு.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை கோவிந்தராஜு வீட்டுக்கு வந்த அனில், அவரை அழைத்துள்ளார். பின்னர் கோவிந்தராஜுவை தனது டூவீலரில் ஏற்றிக் கொண்டு அந்தரள்ளி என்ற இடத்திற்குக் கூட்டிப் போயுள்ளார். அங்கு மற்ற 3 பேரும் வந்துள்ளனர். அந்த இடத்தில் வைத்து நான்கு பேரும் கோவிந்தராஜுவை சரமாரியாக தாக்கியுள்ளனர். மரக் கட்டையால் சரமாரியாக அடித்ததில், கோவிந்தராஜு சம்பவ இடத்திலேயே பலியானார்.

அதன் பின்னர் நான்கு பேரும் தங்களது செல்போனை ஆப் செய்து  விட்டனர். லோஹித்தின் காரில் கோவிந்தராஜுவின் உடலை தூக்கிப் போட்ட நான்கு பேரும், சருமுடிகாட் பகுதியில் உடலைத் வீசி விட்டு தலைமறைவானார்கள்.

இந்த நிலையில் கோவிந்தராஜுவைக் காணாமல் குழப்பமடைந்த குடும்பத்தினர் போலீஸில் புகார் கொடுத்தனர்.போலீஸ் விசாரணையில் இந்த நான்கு பேரும் சிக்கினர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது கோவிந்தராஜுவைக் கொன்று விட்டதை ஒப்புக் கொண்டனர். ஒரு பெண்ணுடன் பேசியதற்காக கொலையா என்று பெங்களூர் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி.. முன்ஜாமின் மனு தள்ளுபடி.. அடுத்து என்ன நடக்கும்?

news

தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் திமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்

news

டெல்லி ஜந்தர் மந்தரில் உச்சக்கட்ட பாதுகாப்பு: மாணவர்கள் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு

news

சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நெய்மர்

news

திருநாவுக்கரசர் நாயனார்.. நான்கு சைவக்குரவர்களில் முதன்மையான அப்பர் சாமிகள்!

news

கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஜிங்க்யா ரஹானே அறிவிப்பு!

news

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடிசெய்தது ஹைகோர்ட்

news

70 வயது தேவ் ஆனந்த் மகனின் மரணம் சொல்லும் செய்தி.. 2வது ஹார்ட் அட்டாக் அபாயகரமானது?

news

நட்பு .. அன்பென்ற சொல்லின் உன்னதமான உயிர்ப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்