பெங்களூர்: என் மனைவி நீண்ட நேரம் தூங்குகிறார். இது எனக்கு பெரும் உளைச்சலை ஏற்படுத்துகிறது என்று போலீஸில் புகார் செய்துள்ளார் பெங்களூரைச் சேர்ந்த ஒரு நபர். இந்த வினோதப் புகாரின் பேரில் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது தெரியாமல் போலீஸார் குழப்பமடைந்துள்ளனர்.
பெங்களூர் பசவனகுடி பகுதியைச் சேர்ந்தவர் கம்ரான் கான். இவர் தனது மனைவி ஆயிஷா மீது பசவனகுடி காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், எனது மனைவி எப்போது பார்த்தாலும் தூங்கிக் கொண்டே இருக்கிறார். என்னையும் சரியாக கவனிப்பதில்லை. எனது பெற்றோரையும் பார்த்துக் கொள்வதில்லை. வீட்டு வேலைகளையும் செய்வதில்லை. எப்போதும் தூங்கிக் கொண்டே இருக்கிறார்.
எனது மாமியார் ஹீனா கெளசர், மாமனார் அரிபுல்லா, மைத்துனர் முகம்மது மொஹின் ஆகியோரிடம் இதுகுறித்து பலமுறை சொல்லியும் அவர்கள் அதை அலட்சியப்படுத்தி விட்டனர். தினசரி இரவு லேட்டாக தூங்கப் போகிறார்.. அடுத்த நாள் பிற்பகல் 12.30 மணி வரை தூங்குகிறார். மேலும் மாலை 5. 30 மணிக்கு மீண்டும் தூங்கப் போய் விடுகிறார். இரவு 9.30 மணிக்குத்தான் எழுந்திருப்பார்.
சமைப்பதில்லை. எந்த வேலையும் செய்வதில்லை. அவர் தற்போது எனது பெற்றோருடனும் சண்டை போட்டு வருகிறார். இதனால் பெரும் மன உளைச்சல் ஏற்படுகிறது. நான் ஏதாவது கேட்டால் உடனே என்னுடன் சண்டை போட்டுக் கொண்டு அம்மா வீட்டுக்குப் போய் விடுகிறார். அவருக்கு உடல் நல பாதிப்பும் உள்ளது. அதுகுறித்து அவரோ அல்லது அவரது வீட்டாரோ என்னிடம் எதுவுமே சொல்லவில்லை. மறைத்து விட்டனர் என்று தனது புகாரில் கூறியுள்ளார் கம்ரான் கான்.
இந்தப் புகார் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகாரின் பேரில் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது தெரியாமல் காவல்துறையினரும் குழம்பிப் போயுள்ளனராம்.
தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!
மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்
தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்
தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?
எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!
முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!
உழவனின் உயிர் நண்பன்!
தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!
{{comments.comment}}