"என்னாது.. எனக்கு ரூ. 9000 கோடியா".. டிரைவரை ஜெர்க் ஆக வைத்த வங்கி!

Sep 21, 2023,05:11 PM IST
சென்னை : சென்னையை சேர்ந்த கார் டிரைவர் ஒருவரின் வங்கிக் கணக்கில் ஒரே நாளில் திடீரென ரூ.9000 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த கார் டிரைவர் ராஜ்குமார். இவரது வங்கி கணக்கில் ரூ.15 மட்டுமே பேலன்ஸ் இருந்துள்ளது. ஆனால்  ரூ.9000 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக ராஜ்குமாருக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் வந்துள்ளது. ஒரே நாளில் 9000 கோடி, அதுவும் தன்னுடைய கணக்கிற்கு யார் டெபாசிட் செய்யப் போகிறார்கள்? தன்னை யாரோ ஏமாற்ற முயற்சி செய்வதாக நினைத்துள்ளார் ராஜ்குமார்.



இருந்தாலும் தன்னுடைய வங்கிக் கணக்கில் 9000 கோடி இருப்பதை உறுதி செய்து கொள்ள நினைத்த அவர், தன்னுடைய நண்பருக்கு ரூ.21,000 ஐ அனுப்பி சோதனை செய்துள்ளார். அதே போல் ரூ.21,000 அனுப்பப்பட்டுள்ளது. இதனால் இன்ப அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்தார் ராஜ்குமார். அந்த சமயத்தில் ராஜ்குமார் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் உயரதிகாரிகள் ராஜ்குமாரை தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். இந்த விவகாரத்தை வெளியில் சொல்லி, விஷயத்தை பெரிதாக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அது மட்டுமின்றி செலவு செய்த ரூ.21,000 பணத்தை திருப்பி தர வேண்டாம். அதற்கு பதிலாக வாகன லோன் தருவதாக சொல்லி சமரசமும் பேசி உள்ளனர். வங்கி தொழில்நட்ப கோளாறால் ஏற்பட்ட இந்த குளறுபடி சென்னையில் பரபரப்பை கிளப்பி உள்ளது. ஒரே நாளில் வங்கி கணக்கில் ரூ.15 லிருந்து ரூ.9000 கோடி வரும் அதிசயம் தங்களுக்கும் நடக்காதா என பலர் ஏக்கத்துடன் தங்களின் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். எப்படியோ வங்கி அதிகாரிகள் செய்த தவறுக்கு ராஜ்குமாருக்கு ரூ.21,000 லாபம் கிடைத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்