சுமதி சிவக்குமார்
50 வயதான நான் கேன்சர் பேஷண்ட் கீமோதெரபி டிரீன்ட்மெண்ட் எடுத்து கொண்டு இருக்கிறேன். டாக்டர் மருந்து மாத்திரைகள், உணவு முறைகள் எழுதி கொடுத்த பின், கிளம்பும் போது, எனது நகத்தை டாக்டரிடம் காட்டினேன். கை விரல் மற்றும் கால் விரல் நகங்கள் அத்தனையும் கருப்பாக , வலுவிழந்து காணப்பட்டன. இதற்கு காரணங்கள் சொன்னார்.
முதல் காரணம் :

இரும்பு சத்து ( iron), பயோட்டின் ( Biotin) விட்டமின் B12 , விட்டமின் டி (vitamin D ) போன்ற முக்கியமான சத்துகள் குறைவாக உள்ளவர்களுக்கு, தொடந்து பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல் போன்ற தண்ணீரில் புழங்கும் வேலைகள் செய்வோருக்கு, நகங்கள் இது போன்று இருக்கும்.
இரண்டாவது காரணம் :
Onychomycosis எனப்படும் பூஞ்சை கிருமியால் ஏற்படும் FUNGAL INFECTION.
மூன்றாவது காரணம்:
கீமோதெரபி ஊசி போடுவதால் ஊசியின் பக்க விளைவுகளாக இதுபோல் ஆகும் என்றார். இதை தவிர பூஞ்சை படர்ந்து இருக்கும். பூஞ்சை இருப்பதை உறுதி செய்தால், ANTI FUNGAL மாத்திரைகள் மற்றும் கிரீம் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு வாராமல் தடுப்பது எப்படி.. ?
விட்டமின் B12 , biotin மற்றும் இரும்பு சத்து மிகுந்த உணவுகளை தினமும் உண்ண வேண்டும். முட்டை, பால், மீன், மாமிசம், ஆட்டிறைச்சி , முருங்கைக்கீரை, பசலை கீரை , ஆட்டு ஈரல், சுவரொட்டி, பூசணி விதைகள், சியா விதைகள், சாலியா விதைகள் (Halim seeds), எள்ளு உருண்டை, கம்பு, கேழ்வரகு, சிவப்பரிசி தோசை, காளி பிளவர், பிராக்கொளி, நெல்லிக்காய், பச்சை பட்டாணி, கொண்டை கடலை, வேர்கடலை, சுண்டைக்காய், பாகற்காய், வெந்தயம் இவற்றை எடுத்து கொள்ளலாம். இவற்றுடன் தினமும் 30 நிமிடம் சூரிய ஒளி படும்படி நடை பயிற்சி செய்ய வைட்டமின் டி கிடைக்கும்.
அகத்தின் அழகு முகத்திலே மட்டுமல்ல, நகத்திலும் கூட தான்..!
( சுமதி சிவக்குமார் தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!
ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!
காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)
அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!
{{comments.comment}}