பெங்களூரு: பெங்களூரு அருகே வால்வோ கார் மீது கண்டெய்னர் லாரி விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள் உட்பட 6 ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூர் அருகே நெலமங்களா கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் தும்கூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் வந்து கொண்டிருந்தது. அப்போது அதற்கு இணையாக ஒரு கண்டெய்னர் லாரியும் சென்று கொண்டிருந்தது. முன்னால் சென்று கொண்டிருந்த இரண்டு கார்கள் அடுத்தடுத்து சென்ற போது விபத்தை தவிர்ப்பதற்காக லாரியை திருப்பியுள்ளார் டிரைவர். அப்போது கண்டெய்னர் லாரி காரின் மேல் விழுந்து நசுக்கியதாக கூறப்படுகிறது.

இதில் காருக்குள் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அருகில் இருந்த கிராம மக்கள் சத்தம் கேட்டு பதறிப் போய் ஓடி வந்தனர். போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. விசாரணையில், காரில் பயணித்தவர்கள் விஜயபுரா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
விபத்து காரணமாக பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல கிலோமீட்டர் தூரம் வரை வாகனங்கள் ஊர்ந்து சென்றன. தற்போது விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழ்நாட்டில் மழை தொடரும்.. நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்.. 25 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்!
தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??
எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)
Folk Song: அத்தனையும் பீரோவிலே இருக்கு .. அப்புறம் எதுக்கு இத்தனை புடவை ஒனக்கு!
நீ கேட்டு எதை மறுத்திருக்கிறேன் என்னவளே?
நாடாத நட்பும் கெடும்.. ஔவையின் பொன்மொழி 60
யோசிக்க வேண்டிய விஷயம் தான்...!
தூத்துக்குடி முத்து போல!
எனக்கும் கடிதம் வந்தது!
{{comments.comment}}