பெண்களுக்கு இலவச பஸ் பயண சலுகைக்கு எதிர்ப்பு.. பெங்களூரில் பந்த்!

Sep 11, 2023,09:22 AM IST
பெங்களூரு: பெண்களுக்கு இலவச பஸ் பயண சலுகை வழங்கியிருப்பதைக் கண்டித்து பெங்களூரில் கர்நாடக மாநில தனியார் வாகனப் போக்குவரத்து அமைப்புகள் இணைந்து இன்று பந்த் நடத்துகின்றன. இதனால் பெங்களூரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததும், அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணச் சலுகை அளிக்கப்பட்டது. அந்த திட்டம் மிகப் பெரிய வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், சாமானிய, நடுத்தர வர்க்கப் பெண்களின் வாழ்க்கையை மிகப் பெரிய அளவில் மாற்றிப் போட்டுள்ளது. இந்தத் திட்டம் மிகப் பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.



இதேபோல கர்நாடகத்திலும் காங்கிரஸ் கட்சி இலவச பஸ் பயண சலுகையை தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதன்படி ஆட்சிக்கு வந்ததும் இந்தத் திட்டத்தை அது அமல்படுத்தியது. ஆனால் அங்கு இந்தத் திட்டத்திற்கு தனியார் போக்குவரத்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்தத் திட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி அவை பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இன்று அந்த பந்த் நடைபெறுகிறது.

பந்த் அழைப்பைத் தொடர்ந்து பெங்களூரு நகரில் போக்குவரத்து மாறுதல்களை காவல்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பொதுமக்களுக்கு அட்வைசரியும் வெளியிடப்பட்டுள்ளது.  பல முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. கே.ஜி சாலை, சேஷாத்ரி சாலை, ஜிடி சாலை, ப்ரீடம் பார்க், மெஜஸ்டிக் பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக வருவதை மக்கள் தவிர்க்குமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.



இதேபோல பெங்களூரு விமான நிலையத்திற்கு வரும்  பயணிகள் முன்கூட்டியே கிளம்பி வருமாறும், உரிய முறையில் பயணங்களைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறும் பெங்களூரு சர்வதேச விமான நிலைய கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.

தனியார் பேருந்துகள், டாக்சிகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட அனைத்து தனியார் வாகனங்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதால் மக்களுக்கு பெரும் அவதி ஏற்படும் என்று தெரிகிறது. அதேசமயம், பிரச்சினையை சமாளிக்க பெங்களூரு மெட்ரோபாலிடன் போக்குவரத்துக் கழகம் கூடுதலாக 500 பேருந்துகளை இன்று இயக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுதவிர விமான நிலையத்துக்கும், விமான நிலையத்திலிருந்தும், 100 கூடுதல் வாயு வஜ்ரா வாகனங்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதேபோல  பெங்களூரு மெட்ரோ நிறுவநமும் இன்று கூடுதல் சேவைக்கு திட்டமிட்டுள்ளது. பீக் அவர் நேரங்களில் 5 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.  மறற நேரங்களில் 8 நிமிடத்திற்கு ஒரு சேவை என மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்