ஆண்டவன் படத்தில் கலெக்டர் கெட்டப்பில் கலக்கும் நடிகர் பாக்கியராஜ்!

Mar 05, 2024,03:26 PM IST

சென்னை: நடிகர் கே பாக்யராஜ் கலெக்டர் கதாபாத்திரத்தில் நடித்த ஆண்டவன் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளிவரும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.


தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர், வசனகர்த்தா, இயக்குனர், தயாரிப்பாளர், பத்திரிகையாளர் என பன்முக திறமை கொண்ட கலைஞர் கே. பாக்யராஜ். இவர் மிகப் பிரபலமான பதினாறு வயதினிலே மற்றும் கிழக்கே போகும் ரயில் படத்தில் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.


பின்னர் ஒரு சில படங்களில் சிறுசிறு ரோல்களிலும் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வந்தார். இதனைத் தொடர்ந்து இயக்குனர் பாரதிராஜா புதிய வார்ப்புகள் என்ற படத்தில் பாக்கியராஜயை வசனகர்த்தாவாக மட்டும் இல்லாமல் கதாநாயகனாகவும் அறிமுகப்படுத்தினார். பின்னர் சுவரில்லாத சித்திரங்கள் என்ற படத்தில் அறிமுக இயக்குனராகவும் வலம் வந்தார். 




இதை தொடர்ந்து பாக்கியராஜ் நடித்த பல படங்கள் தமிழ் சினிமாவின் முத்திரை பதித்த திரைப்படங்களாக இருந்தன. அப்படிப்பட்ட திரைப்படங்கள் வெள்ளி விழா கொண்டாடும் திரைப்படங்களாகவே அமைந்தன. குறிப்பாக இவர் நடித்த முந்தானை முடிச்சு திரைப்படம்  பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதிலும் இப்படத்தில் முருங்கைக்காய் பற்றிய வசனங்கள் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.


இதன் மூலம் மிக பெரிய ரசிகர் பட்டாளமும் உருவானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவ்வப்போது ஒரு சில படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகர் பாக்கியராஜ் தற்போது ஆண்டவன் என்ற படத்தில் கமிட்டாகி, அப்படத்தில் கலெக்டர் வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார்.


வில்லியம் பிரதர்ஸ் ப்ரடக்சன் தயாரிப்பில் ஆண்டவன் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி, இயக்கியுள்ளார் வி.வில்லி திருக்கண்ணன். நாட்டில் ஒரு புறம் நகரங்கள் வாழ்கிறது.மறுபுறம் கிராமங்கள் அழிகிறது. கிராமங்கள்தான் நமது நாட்டின் முதுகெலும்பு போன்றவை என்பதை மக்கள் புரிந்து கொண்டு கிராமங்களை வாழ வைக்க வேண்டும் என்ற கதையை அழுத்தம் திருத்தமாக இப்படத்தில் கூறியுள்ளாராம்.மேலும் ஒருவர் கஷ்டப்படும் போது அவருக்கு சரியான நேரத்தில் யார் உதவுகிறாரோ அவரை ஆண்டவன் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதே இப்படத்தின் மைய கதையாம். 


இதில் நடிகர் பாக்கியராஜ் கலெக்டராக நடித்துள்ளார். டிஜிட்டல் விஷன் யூடியூபர் மகேஷ் கதை நாயகனாகவும் ,வைஷ்ணவி நாயகியாகவும்  நடித்துள்ளனர். இவர்களுடன் கஞ்சா கருப்பு, முத்துக்களை, ஆதிரை ,ஹலோ கந்தசாமி, எம் கே ஆர் முத்து செல்வம், காக்கா முட்டை ஆயா, உடுமலை ரவி, மங்கி ரவி, மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி

news

ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்

news

Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்

news

இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?

news

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!

news

கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள்.. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்

news

கூலி டிரெய்லர்.. ஆகஸ்ட் 2ல் ரிலீஸ்.. லோகேஷ் கனகராஜ் செம தகவல்.. கைதி 2 எப்போ தெரியுமா?

news

டெல்லி கல்லூரி, மும்பை பங்குச் சந்தைக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்கள்.. தீவிர சோதனை!

அதிகம் பார்க்கும் செய்திகள்