நெருப்பும் நீரும்!

Oct 06, 2026,10:35 AM IST

- பா. பானுமதி


நெருப்பாய் நினைவுகள் நெஞ்சில் தகித்தன

நெருக்கமாய் வளைந்து நீராய் சுழன்றன


நேரில் சந்தித்து நினைவுகளை சிந்தி விட சிந்தித்தன

கண் நிறைந்த கனவுகளோடு கால்கள் இரண்டும் சென்றன 


உரியவரிடம் உள்ளத்தை திறந்து காட்டி உரைத்திட முயன்றன

கண்டேன் காரிகையை அங்கே அவளும் 


கவிதையாய் பகின்றாள் தன்னுடைய நிலையை

களிப்பிலே என் உள்ளம் உயர்ந்தாட 

காற்றாய் எண்ணங்கள் சுழன்றாட 


சற்றைக் கெல்லாம் சதுராடியது என்னை உதிராடியது 

கவின்மொழி பேசியவள் அதனை என் நண்பனுக்கு என்றாள்




எங்கள் இருவரையும் இணைத்து வைக்க வேண்டும் 

இரு இதயங்களையும் பிணைத்து வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தாள்


காற்று போன பலூன் ஊற்றில்லா பாலைவனமாய் என் மனம் மாற

நெஞ்சில் இருந்த நெருப்பெல்லாம் நீராய் வடிந்தது 


கண்கள் கலங்கியதை காணாதவாறு மறைத்து 

கை கொடுப்பேன் என்று உறுதி அளித்தேன் 


இணைவதை காட்டிலும் இணைப்பதே இன்னும் இனிமை என தெளிந்தேன் 


இருபுறம் பற்றினாலே நெருப்பு ஒளிரும் 

இல்லையேல் நீராகி அணையும் என புரிந்தேன் 


இனி எனக்குரியவள் அல்ல 

என் நண்பனுக்கு உரியவள் என இதயம் கனிந்தேன்


(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், பட்டிமன்றப் பேச்சாளர், மதுரை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: வாக்குப்பதிவு நிறுத்தம்...போலீசுடன் திமுக வாக்குவாதம்!

news

தென்தமிழ் தலையங்கம்: டேட்டிங் ஆப் முதல் குழந்தைப் பேறு வரை.. சிங்கப்பூருக்கு வந்த சோதனை!

news

உன்னை என் மனதுக்குள் வைப்பேன் அன்பே!

news

சிந்தனைச் சிதறல்.. உணவையும் உறவையும் உள்ளன்போடு பகிர்வதில் நிறைவு காண்போம்!

news

நெருப்பும் நீரும்!

news

ஸ்வீட் மச்சான்.. அட நம்ம ஸ்மித் மச்சார்தாங்க.. இந்தியன் டா.. காலரைத் தூக்கி விட்டுக்கலாம்!

news

மனம் கொத்திப் புடவை .. ஒரு நிமிடக் கதை (28)

news

Assembly By Election: நாளை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: அனைத்து ஏற்பாடுகளும் தயார்

news

சென்னை பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக வழக்கு: வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு வாபஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்