- பா.பானுமதி
இறைவா நீ எங்கிருக்கிறாய்
இமைகளுக்கு தெரியாமல் எங்கோ இருக்கிறாய்
இதயத்தில் இருந்தால்
என் விழிகளுக்கு தெரியாது
உதயத்தில் இருக்கிறாய்
ஆனாலும் உண்மை விளங்காது
காணும் காட்சிகளில் எல்லாம் கலந்திருக்கிறாய்
எனினும் கண்களுக்கு புரியாது
உதவும் உள்ளங்கள் எல்லாம் ஒளிந்து இருக்கிறாய்
என்றாலும் உண்மை தெரியாது

இயற்கையில் இருண்ட கலந்திருக்கிறாய்
என்றாலும் இமைகளுக்கு தெரியாது
சுமைகளை சுமந்து கொண்டு சுற்றி வருவதால்
சுகங்களில் நீ இருந்தாலும் உள்ளம் அதை உணராது
எங்கே இருந்தாலும் நீ எதிர்பட்டு விடு
எண்ணற்ற வினாக்கள் என்னை எடுத்து விளையாடுகிறது
கோவில்களில் குடியிருக்கிறாயா
கும்பிட்டாலும் தெரியவில்லை
வீட்டிலே வீற்று இருக்கிறாயா
விழுந்து வணங்கினாலும் விளங்கவில்லை
தேடிக் கொண்டே இருக்கிறேன்
என் கண்ணில் படாமல் இருந்தால் எப்படி
வாட விட்டு வறுத்தமுற்று
வளைத்து விடலாமா நல்சொற் படி
கண்முன்னே வா கேள்விக்கணைகளை ஏற்று
களைக்காமல் விடையை தா...
இருப்பிடம் தெரிந்து விட்டால் இந்த இம்சை இல்லை
பொறுப்பிடம் நீயே என்று புகுந்து விடுவேன்
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)
தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை
ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?
US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!
ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!
ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!
Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!
Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?
சிவசங்கரி.. சமூக நியாயங்களையும்.. மனித உணர்வுகளையும் ஆழமாகத் தொட்டவர்!
Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!
{{comments.comment}}