- வர்ஷினி
சென்னை: மலையாளத்தில் ரகுமான் - பரத் இணைந்து நடித்த சயின்டிபிக் திரில்லர் படமான சமரா, தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் உருவாகியுள்ளது. இப்படம் அக்டோபர் 13ம் தேதி திரைக்கு வருகிறது.
பீகாக் ஆர்ட் ஹவுஸ் சார்பில் எம்.கே. சுபாகரன், அனுஜ் வர்கீஸ் வில்யாடத் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் “சமரா”. துருவங்கள் பதினாறு" படத்திற்கு பிறகு வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்கள், கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரகுமான் இப்போது ‘சமாரா’ படத்திலும்
அனைத்து தரப்பினரையும் வெகுவாக ஈர்க்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஹிந்தியில் பஜ்ரங்கி பாய்ஜான், ஜோலி எல்எல்பி 2, தமிழில் விஸ்வரூபம் 2 ஆகிய படங்களின் மூலம் பிரபலமான பாலிவுட் நடிகர் மீர்சர்வார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இயக்குநர் சார்லஸ் ஜோசப் படம் குறித்துக் கூறுகையில், குடும்ப சென்டிமென்ட்டுடன் திரில்லரைக் கலந்து கொடுத்துள்ளோம். கூடவே அறிவியலும் கலந்திருக்கும். விறுவிறுப்பான திரைக்கதை. அனைவராலும் ரசிக்கப்படும் பாராட்டப்படும் என்றார்.
அக்டோபர் 13ம் தேதி திரைக்கு வரும் இப்படம் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்று நம்பலாம்.
பத்து வார்த்தையில் .. எட்டு.. திட்டு.. ஆனாலும் ரசிக்கிறேனே என்னவளே!
மாறுமா சமுதாயம்?
வரிகள் கண்ட கண்கள்... இசையை இதழில் சேர்க்கும்..!
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
{{comments.comment}}