- பாரதிராஜன்
எத்தனையோ ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் பிறக்கிறார்கள், வாழ்கிறார்கள், ஆனால் ஒரு சிலர் மட்டுமே பெருமை அடைகிறார்கள். அந்த மாதிரியான ஒருவர் தான் சின்னப்பிள்ளை என்பவர்.
மதுரை அருகிலுள்ள பில்லுச்சேரி கிராமவாசி. சிறிய வயதிலேயே திருமணம். கணவரால் வேலைக்கு செல்ல முடியாத நிலை அதற்குள் இரண்டு குழந்தைகள் மொத்தம் 4 உயிரைக் காப்பாற்றும் பொறுப்பு சின்னப்பிள்ளை தலையில் விழுந்தது.
இந்நிலையில்தான் இன்றளவும் எழுதப் படிக்கத் தெரியாதவராக இருப்பினும், கிராமப்புற மகளிரிடையே சிறுசேமிப்பு பழக்கம் ஏற்படுத்தி, களஞ்சியம் எனும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பொருளாதார நிலையை மேம்படுத்திக் காட்டினார். சின்னப்பிள்ளையின் பெயர் தமிழக வரலாற்று பக்கங்களில் இடம் பெறத் தொடங்கினார்.

சின்னப்பிள்ளை அவர்களுடைய சேவையைப் பாராட்டி மகளிர் மேம்பாட்டுக்காக வழங்கப்படும்"ஸ்திரீ சக்தி " என்ற உயர் விருதை மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களிடம் இருந்து பெற்றார்.தன்னை விட வயதில் இளையவரான சின்னப்பிள்ளை காலில் திரு. வாஜ்பாய் விழுந்து ஆசி பெற்றார்.
சென்னைப் புத்தகக் கண்காட்சியில் சந்தித்து உரையாடியது மகிழ்ச்சியான நாட்கள். புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என்றார், ஆட்டோகிராப் போட மறுத்து விட்டார்.
(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)
அக்., 11-ல் சென்னை வரும் பிரதமர் மோடி: பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்
செவிலியர்கள் கைது மற்றும் போலீஸ் நடவடிக்கை: தவெக அரசுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்!
தென்தமிழ் தலையங்கம்: டேட்டிங் ஆப் முதல் குழந்தைப் பேறு வரை.. சிங்கப்பூருக்கு வந்த சோதனை!
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: வாக்குப்பதிவு நிறுத்தம்...போலீசுடன் திமுக வாக்குவாதம்!
விண்ணில் தந்திடும் வாழ்வில் உயர்வை!
பாரபட்சம் கூடாது!
மகத்தான மதுரை சின்னப்பிள்ளை!
கதையல்ல நிஜம்: "சாண்ட்விச்" ஜெனரேஷன்.. அந்தப் பக்கமும் போகாமல்.. இங்குட்டும் நகர முடியாமல்!
Good afternoon Recipe: மென்மையான குலாப் ஜாமுன் செய்வது எப்படி?
{{comments.comment}}