சென்னை: அரசு கல்வி நிறுவனத்தில் ஜூனியர் கிளார்க் வேலைக்கு 199 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன.
இந்தியா முழுவதும் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 199 ஜூனியர் கிளார்க் பணிகளுக்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பணியில் சேர வேண்டும் என்றால் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அரசு கல்வி நிறுவனத்தில் ஜூனியர் கிளார்க் பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்ச வயது வரம்பு 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி, வயது வரம்பில் தளர்வு உண்டு. ஒபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள் வரையும், எஸ்சி/எஸ்டி பிரிவினர்களுக்கு 5 வருடங்கள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். எஸ்சி, எஸ்டி மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை. ஏனைய விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500 விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. கட்டணத்தை ஆன்லைன் வாயிலாக செலுத்தப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தகுதி உடையவர்கள் செயல்முறை தேர்வுகளில் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு ஆகிய முறைகளின் படி தேர்வர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 199 ஜூனியர் கிளார்க் பணியிடங்களுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் 19,900 முதல் 63,200 வரை சம்பளம் வழங்கப்படும்.
குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் மார்ச் 18ம் தேதி முதல் ஏப்ரல் 17ம் தேதிக்குள் https://bhu.ac.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக Register செய்து பின்னர் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 நாள் வேலை திட்டம் பெயர் மாற்றம்... டிசம்பர் 18ம் தேதி காங்கிரஸ் போராட்டம்: செல்வப்பெருந்தகை
எஸ்ஐஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு
Political Maturity on cards?.. கே.ஏ.செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் பயணிக்குமா தவெக?
ஈரோடு விஜய் பிரச்சாரம்.. ஏகப்பட்ட நிபந்தனைகள்.. கடைப்பிடிப்போம் என பத்திரம் கொடுத்த தவெக!
மார்கழி மாதம் .. அணிவகுத்து நிற்கும் முக்கிய வழிபாடுகள்!
வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவிலில்.. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை வழிபாடு
மாசமோ மார்கழி மாசம்.. வாசலில் கலர் கலர் கோலம்.. தினம் ஒரு கோலம்!
தொந்தி மாமா வந்தாராம்.. தொப்பியை தலையில் போட்டாராம்!
மாதங்களில் மார்கழி.. Ode to the Auspicious Marghazi Month!
{{comments.comment}}