பிக்பாஸ் தமிழ் சீசன் 7... அந்த 18 போட்டியாளர்கள் இவங்க தானா?

Aug 29, 2023,10:40 AM IST
சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 7ல் பங்கேற்க உள்ள 18 போட்டியாளர்கள் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இந்த சீசன் எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரிக்க துவங்கி உள்ளது. 

விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விரைவில் துவங்கப்பட உள்ளது. இதற்காக கமல் இருக்கும் இரண்டு ப்ரோமோக்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதில், இந்த முறை பிக்பாசில் 2 வீடுகள் என்ற கமல் வெளியிட்டுள்ள தகவல் அனைவரின் எதிர்பார்ப்பையும் ஒரு படி அதிகமாகவே எகிற வைத்துள்ளது. இந்நிலையில் போட்டியாளர்கள் குறித்த விபரங்களும் வெளியாகி உள்ளது.



பிக்பாஸ் சீசன் 7 ல் சாமானிய மக்களில் ஒருவராக கமலிடம் சமீபத்தில் கார் பரிசு வாங்கிய கோவை பெண் டிரைவர் ஷர்மிளா பங்கேற்க போகிறார் என ஏற்கனவே கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக மற்ற போட்டியாளர்களாக நடிகர் அப்பாஸ், பிருத்விராஜ், சோனியா அகர்வால் ஆகியோரும் பங்கேற்க போகிறார்களாம்.



அவர்களுடன் குக் வித் கோமாளி புகழ் அம்மு அபிராமி, தர்ஷா குப்தா, சந்தோஷ் பிரதாப், நடிகை ஷகிலாவின் வளர்ப்பு மகளும் திருநங்கையுமான மிலா, விஜய் டிவி தொகுப்பாளர்கள் ரக்ஷன், ஜாக்குலின், நடிகை ரக்சிதாவின் முன்னாள் கணவர் தினேஷ், விஜே பார்வதி, நடிகை ரேகா நாயர், செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், காக்கா முட்டை விக்னேஷ், டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர், பயில்வான் ரங்கநாதன், நடிகர் மாரிமுத்து ஆகியோரும் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ளதாக சொல்லப்படுகிறது.



அது மட்டுமல்ல முதல் சீசனில் பரபரப்பை கிளப்பி பாதியில் வெளியேறிய நடிகை ஓவியாவும் இந்த சீசனில் மீண்டும் பங்கேற்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் இந்த சீசனில் போட்டி கடுமையாக இருக்கும் என்பதை விட பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!

news

எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு

news

குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

news

பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு

news

தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!

news

Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்