பிக் பாஸ் தமிழ் சீசன் 8.. என்னங்க சொல்றீங்க.. கமல்ஹாசன் இடத்தை பிடிக்க போகும்.. புது பாஸ் இவரா??

Aug 14, 2024,05:30 PM IST

சென்னை: பிக்பாஸ் சீசன் 7 வரை தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமல்ஹாசன் 8வது சீசனில் இருந்து தான் விலகுவதாக அறிவித்த நிலையில் இந்த நிகழ்ச்சியை அடுத்து யார் நடத்தப் போவது என்ற எதிர்பார்ப்பு சுவாரஸ்யமானதாக மாறியுள்ளது.


ரஜினிகாந்த் முதல் பல்வேறு நடிகர்களின் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் தற்போது மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


பிக் பாஸ்  நிகழ்ச்சி பல்வேறு மொழிகளில் வெளியாகி பல தரப்பினரிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதிலும் தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. அதற்கு காரணம் நடிகர் கமலஹாசன் தொகுப்பாளராக வந்தது தான். இவர் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியை காணவே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்து வந்தனர். 




ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சி எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு மக்கள் மனதில் நிலவி வந்தது. ஆனால் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி மக்களிடையே ஆதரவு பெற்று சூப்பர் ஹிட் ஆனது. குறிப்பாக ஓவியாவால் இந்த ஷோ மிகப் பெரிய பிரபல்யத்தை அடைந்தது. இதன் வெற்றியை  தொடர்ந்து ஒவ்வொன்று சீசன்களையும் வித்தியாச முறையில் சிறப்பாக தொகுத்து வழங்கி வந்தார் கமல். கமல்ஹாசனின் கம்பீரமான பேச்சு, நடை, உடை, தோற்றம், அவர் போட்டியாளர்களைக் கையாண்டது, குறும்படம் போட்டுக் காட்டுவது என அனைத்தும் ரசிகர்களைக் கவர்ந்தது.


சமீபத்தில் நடிகர் கமலஹாசன்   கமிட்டான புது படங்களில் பிசியாக இருப்பதால் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து தான் விலகுவதாக அறிவித்தார். இது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இனிமே நாங்க பிக் பாஸ் பார்க்கவே மாட்டோம் என்று பலரும் கூறும் அளவுக்கு நிலைமை போனது. மறுபக்கம், பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது யார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவி வருகிறது. ரஜினிகாந்த், ராதிகா, சரத்குமார், சூர்யா, சிம்பு என பல நட்சித்திரங்களை பலரும் பரிந்துரை செய்து வருகிறார்கள்.


இந்த நிலையில் பிக் பாஸ்  சீசன் 8 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் கமல்ஹாசனுக்கு நிகர் கமல்ஹாசன் தான். இவரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  அதேசமயம், அவர் அளவுக்கு ஓரளவுக்கு செய்யக் கூடியவர் என்றால் அது நிச்சயம் விஜய் சேதுபதிதான். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் குட் சாய்ஸாக இருக்கும் என்று பிக் பாஸ் ரசிகர்கள் கூறுகிறார்கள்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

news

இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)

news

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

news

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!

news

பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?

news

இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )

news

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்

news

ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்

அதிகம் பார்க்கும் செய்திகள்