சென்னை: பிக் பாஸ் 7 தமிழ் தொடரின் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை அர்ச்சனாவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சின்னத்திரையில் மிகப் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் திகழ்கிறது. இதுவரை 6 சீசன்களைக் கண்டுள்ள பிக் பாஸ், இந்த ஆண்டு 7வது சீசனை நாளையுடன் நிறைவு செய்யவுள்ளது. நாளை கிரான்ட் பினாலே ஒளிபரப்பாகவுள்ளது.
அக்டோபர் 2ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 7 ஷோவில் முதலில் 18 பேர் களம் இறங்கினார்கள். ஒவ்வொருவராக வெளியேற வெளியேற வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் பலர் உள்ளே நுழைந்தனர். அர்ச்சனா, பேச்சாளர் அன்னபாரதி, பாடகர் கானா பாலா, தினேஷ் மற்றும் பிராவோ ஆகியோர் வைல்ட் கார்ட் மூலம் உள்ளே வந்தனர்.
தற்போது இறுதிக் கட்டமாக 5 பேர் உள்ளே உள்ளனர். அர்ச்சனா, மணி சந்திரா, மாயா, விஷ்ணு மற்றும் தினேஷ் ஆகியோரே அவர்கள். தற்போது கிரான்ட் பினாலேவுக்கான ஒளிப்பதிவு நடந்து வருகிறது. இதில் கமல்ஹாசன் கலந்து கொண்டுள்ளார்.
இதில் விஷ்ணுவும், தினேஷும் வாக்குகளின் அடிப்படையில் கடைசி 2 இடங்களைப் பிடித்து வெளியேற்றப்பட்டுள்ளனராம். அதைத் தொடர்ந்து அர்ச்சனா அதிக வாக்குகளுடன் முதலிடத்தைப் பிடித்து டைட்டிலைத் தட்டிச் சென்றுள்ளாராம். மணி சந்திராவுக்கு 2வது இடமும், மாயாவுக்கு 3வது இடமும் கிடைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இப்போது வந்துள்ள தகவல்கள் உண்மையாக இருந்தால் அர்ச்சனா புதிய சாதனைக்கு உரியவராவார்.. அதாவது இதுவரை நடந்த பிக் பாஸ் போட்டிகளில் வைல்ட் கார்டில் வந்து யாருமே பட்டம் வென்றதில்லை. ஆரம்பத்திலிருந்து கடைசி வரை வந்தவர்களில் ஒருவர்தான் பட்டம் வென்றுள்ளனர். அர்ச்சனாதான் வின்னர் என்றால், முதல் முறையாக ஒரு வைல்ட் கார்ட் என்ட்ரி பட்டம் வென்ற பெருமை அவருக்குக் கிடைக்கும். மேலும் பிக் பாஸ் பட்டத்தை வெல்லும் 2வது பெண் என்ற பெருமையும் அர்ச்சனாவுக்குக் கிடைக்கும்.
இதுவரை பிக் பாஸ் பட்டம் வென்றவர்கள்
முதல் சீசன் - ஆரவ் நபீஸ் (2வது இடம் சிநேகன்)
2வது சீசன் - ரித்விகா (2வது இடம் ஐஸ்வர்யா தத்தா)
3வது சீசன் - முகேன் ராவ் (2வது இடம் சான்டி)
4வது சீசன் - ஆரி அர்ஜூனன் (2வது இடம் பாலாஜி முருகதாஸ்)
5வது சீசன் - ராஜு ஜெயமோகன் (2வது இடம் பிரியங்கா தேஷ்பாண்டே)
6வது சீசன் - முகம்மது அஸீம் (2வது இடம் விக்ரமன்)
நேபாளத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு: 14 பேர் பலி
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
தாய்!!!
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
{{comments.comment}}