சென்னை: டிவி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 7 இன்று கோலாகலமாக தொடங்குகிறது.
சின்னத் திரை ரசிகர்களைக் கட்டிப் போட்ட நிகழ்ச்சிகளில் பிக் பாஸுக்கு தனி இடம் உண்டு. விஜய் டிவியில் வருடா வருடம் வரும் இந்த பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவை கமல்ஹாசன் தொகுத்து அளிக்கிறார். முதல் ரியாலிட்டி ஷோ முதல் கடந்த 6 வருட காலமாக பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களின் மனதில் தனி இடம் பிடித்து விட்டது.
இந்த நிலையில், பிக் பாஸ் ஏழாவது சீசன் இன்று அக்டோபர் 1ம் தேதி முதல் தொடங்க உள்ளது. பிக் பாஸ் என்றாலே ஆ என்று வாயை பிளந்து வைத்துக்கொண்டு பார்க்கும் அளவிற்கு இந்நிகழ்ச்சி பிரபலம். அடுத்த வீட்டுக்குள் ஏதாவது நடந்தால் பலருக்கும் அது பொழுது போக்காகவே இருக்கிறது.. என்ற அடிப்படையில்தான் இந்த நிகழ்ச்சியே வெற்றி அடைந்தது.

இப்படி ரசிகர்கள் மத்தியில் ஏகேபித்த வரவேற்பை பெற்ற பிக்பாஸ் 7 சீசன் இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. இதனை உலக நாயகன் கலஹாசன் தொகுத்து வழங்குகிறார். 20 போட்டியாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இந்நிகழ்ச்சி தொடர்ந்து 3 மாதங்கள் நடைபெற உள்ளது. ரசிகர்கள் மத்தியில் 3 மாதத்திற்கும் இந்த பிக்பாஸ் 7 சீசன் குறித்த பீவர் இருக்க தான் செய்யும்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}