பாட்னா: பீகார் மாநில சட்டசபைத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் (EC) செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. இந்த பட்டியலில் மொத்தம் 7.4 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இது முந்தைய எண்ணிக்கையை விட 6% குறைவு.
சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) காரணமாக, ஜூன் 24 அன்று இருந்த 7.9 கோடி வாக்காளர்களில் இருந்து சுமார் 47 லட்சம் வாக்காளர்கள் குறைந்துள்ளனர். ஆனால், ஆகஸ்ட் 1 அன்று வெளியிடப்பட்ட வரைவுப் பட்டியலை விட 17.9 லட்சம் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். 3.7 லட்சம் வாக்காளர்கள் "தகுதியற்றவர்கள்" என்று நீக்கப்பட்டனர். அதே நேரத்தில் 21.5 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த பட்டியல் வெளியீடு தேர்தல் தேதி அறிவிப்புக்கான பணிகளைத் தொடங்கி வைத்துள்ளது. தேர்தல் செயல்முறையின் போது துணைப் பட்டியல்கள் வெளியிடப்படும். எனவே இறுதி எண்ணிக்கையில் சிறிய மாற்றம் இருக்கலாம்.

பீகாரில் தேர்தல் ஆணையம் நடத்திய சார் எனப்படும் SIR சிறப்பு திருத்த நடைமுறை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது சுப்ரீம் கோர்ட் வரை சென்றது. தேர்தல் பிரச்சாரத்தை விட இந்த தேர்தல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிதான் பிரதானமாக இருந்தது. வழக்கமான பிரச்சினைகள் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டன.
எதிர்க்கட்சிகள் SIR-க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆரம்பத்தில் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. பல்வேறு காரணங்களுக்காக இந்த நீக்கங்கள் நடந்தன. இதையடுத்து போராட்டங்கள் வெடித்தன. முதல் பெரிய போராட்டம் ஆகஸ்ட் 17 அன்று நடந்தது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வாக்காளர் அதிகார யாத்திரையை நடத்தினார். ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் அவருக்கு ஆதரவு அளித்தன என்பது நினைவிருக்கலாம்.
ஜனநாயகன் வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றத்தையே அணுக உச்சநீதிமன்றம் உத்தரவு
பொங்கல் மட்டுமல்ல இன்று.. இன்னொரு நாளும் இன்று கொண்டாடப்படுகிறது.. அது என்ன?
இந்தியாவை எஃகு கோட்டையாக்கி .. எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம் ஆகி!
வழிந்தோடும் பொங்கலுடன் இணையும் அனைத்து நற்பலன்கள்!
பொங்கலோ பொங்கல் என்றுரத்துக் கூவிட.. கிண்டிடக் கிண்டிடக்.. குலவையிட்டு!
மங்கலத் தை மலர்ந்த நாள் பொங்கல் வைத்து எங்கும் இன்பம்!
தை மாதம் பிறந்தது பொங்கலோ பொங்கல் .. பொங்கலோ பொங்கல் !
வைகைத் துயில் கலைந்து வாசலில் போட்ட கோலங்கள்!
வருக வருக.. தை மகளே வருக..!
{{comments.comment}}