பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் நிதிஷ்குமார்.. மீண்டும் நாடாளுமன்றத்திற்கு ரிட்டர்ன்!

Mar 05, 2026,04:42 PM IST
பாட்னா :பீகார் அரசியலில் பெரும் மாற்றமாக, முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது பதவியைத் ராஜினாமா செய்து விட்டு, மாநிலங்களவைக்கு  செல்லக்கூடும் என்றும், அவரது மகன் நிஷாந்த் குமார் தீவிர அரசியலில் கால்பதிக்க உள்ளதாகவும் வெளியாகி வரும் தகவல்களை ராஜ்யசபா தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு நிதிஷ்குமாரே உறுதி செய்துள்ளார்.

பீகார் மாநில அரசியலில் நீண்ட காலமாக முதலமைச்சர் பதவியில் இருக்கும் நிதிஷ் குமார், விரைவில் தனது பதவியைத் ராஜினாமா செய்து விட்டு டெல்லி அரசியலுக்கு நகர வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பலத்த செய்திகள் பரவி வருகின்றன. அதே நேரத்தில், அவரது ஒரே மகனான நிஷாந்த் குமார் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக வெளியாகி இருக்கும் தகவல் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய ஜனதா தளம் (JD-U) கட்சியின் தலைவரான நிதிஷ் குமார், பீகார் முதலமைச்சர் பொறுப்பை பாரதிய ஜனதா கட்சியிடம் (BJP) ஒப்படைத்து விட்டு, தாம் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நீண்ட காலமாக பீகாரின் முதலமைச்சராகப் பணியாற்றி வரும் அவர், தற்போது தேசிய அரசியலில் அதிக கவனம் செலுத்த விரும்புவதாகவும், அதன் ஒரு பகுதியாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



மகனின் அரசியல் பிரவேசம்:

இதுவரை அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்த நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார், தற்போது தீவிர அரசியலில் ஈடுபட சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. இது குறித்து ஜேடியூ (JD-U) கட்சியின் மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான ஷரவன் குமார் கூறுகையில், "நிஷாந்த் குமார் அரசியலுக்கு வர வேண்டும் என்பது கட்சித் தொண்டர்களின் நீண்ட கால விருப்பம். அவர் தற்போது கட்சிப் பணிகளில் ஈடுபட முடிவெடுத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

நிஷாந்த் குமார் ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார். அவர் தனது தந்தையின் அரசியல் வாரிசாக உருவெடுப்பாரா அல்லது மாநில அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளை ஏற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஒருவேளை நிதிஷ் குமார் பதவி விலகினால், நிஷாந்த் குமாருக்கு மாநிலங்களவை சீட் வழங்கப்படலாம் அல்லது அவர் பீகார் துணை முதலமைச்சராக நியமிக்கப்படலாம் என்றும் ஊகங்கள் கிளம்பியுள்ளன.

குடும்ப அரசியலுக்கு எதிராக எப்போதும் குரல் கொடுத்து வந்த நிதிஷ் குமார், இப்போது தனது மகனை அரசியலுக்குக் கொண்டு வருவது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை எழுப்பத் தொடங்கியுள்ளன. இருப்பினும், கட்சியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!

news

பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

news

எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!

news

பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்

news

“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!

news

"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!

news

மக்களவையில் 2ஆவது நாளாக எதிர்கட்சிகள் அமளி: தொடர்ந்து அவை ஒத்திவைப்பு!

news

பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்

news

பி.வி. சிந்துவுக்கு விராட் கோலி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ஜப்பானில் நடந்த மேஜிக்!

அதிகம் பார்க்கும் செய்திகள்