மதுரை: மதுரை வண்டியூர் அருகே பாஜக நிர்வாகி நடுரோட்டில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் சக்திவேல். 35 வயதான சக்திவேல் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். பாஜக ஓபிசி பிரிவு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் இன்று காலை அவருக்கு சொந்தமான குடோனுக்கு பைக்கில் சென்றுள்ளார். அப்போது மர்ம நபர்கள் இவரை தொடர்ந்து சென்றுள்ளனர்.
அப்போது சக்திவேலை மர்ம நபர்கள் ஆயுதங்கலால் தாக்க முற்பட்ட போது, சக்தி வேல் தப்பித்து ஒட முயற்சி செய்துள்ளார். அவரை விடாது துரத்தி சென்ற மர்ம நபர்கள் சரமாரியாக சக்திவேலை தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த பாஜக நர்வாகி சக்திவேல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்து வந்த அண்ணாநகர் காவல்துறையினர். ரத்த வெள்ளத்தில் கிடந்த சக்திவேலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல் துறையினர் செய்த விசாரணையில் சக்திவேலுக்கும், மற்றொருவருக்கும் பிரச்சினை இருப்பது தெரியவந்தது. இவ்விருவருக்கும் சரக்கு வாகனம் விற்கப்பட்ட விவகாரத்தில் பிரச்சனை எழுந்துள்ளது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் குற்றவாளிகளை கைது செய்துவதற்காக தேடி வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.. குலச்சிறை நாயனார் !
தமிழுக்கு ஓர் இழப்பு!
ரீல்ஸ் மோகம்!
{{comments.comment}}