டில்லி : விரைவில் நடைபெற உள்ள ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தலுக்காக பாஜக தற்போதே வேகமாக தயாராக துவங்கி விட்டது. இதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று (ஆகஸ்ட் 04) டில்லியில் நடந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடத்துவதற்கான சூழல் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் தலைமையில் கமிஷனர்கள் ஞானேஷ் குமார், சுக்பிர் சிங் சாது ஆகியோர் அடங்கிய குழு ஆகஸ்ட் 8 ம் தேதி முதல் 10ம் தேதி வரை காஷ்மீர் செல்ல உள்ளது. 2024 லோக்சபா தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பும் இந்த ஆண்டு மார்ச் மாதம், தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் காஷ்மீர் சென்று விட்டு வந்தார்.
காஷ்மீர் மாநில தேர்தலை செப்டம்பர் 20ம் தேதிக்கு முன்பாக நடத்தி முடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கெடு விதித்துள்ளது. சட்டப்பிரிவு 370 தொடர்பான வழக்கின் தீர்ப்பை வழங்கும் போது தேர்தல் கமிஷனுக்கு இந்த உத்தரவை சுப்ரீம் கோர்ட் விதித்துள்ளது. இதனால் ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 30 வரையிலான காலத்திற்குள் காஷ்மீர் மாநில தேர்தல் தொடர்பான பணிகளை தேர்தல் கமிஷன் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் 2024 காஷ்மீர் தேர்தலுக்காக தேர்தல் அறிக்கையை தயார் செய்வதற்காக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தலைமையில் பாஜக நிர்வாகிகள், காஷ்மீர் பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று கூடி ஆலோசனை நடத்தி உள்ளனர். காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான பாஜக பொறுப்பாளராக கிஷன் ரெட்டி தான் நியமிக்கப்பட்டுள்ளார். இதில் காஷ்மீர் பாஜக மாநில தலைவர் ரவீந்தர் ரெய்னா உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சட்டப்பிரிவு 370 அமல்படுத்தப்பட்ட பிறகு காஷ்மீரில் நடக்கும் முதல் சட்டசபை தேர்தல் இதுவாகும். இதனால் தேர்தல் அறிக்கையை மிக கவனமாக தயாரிக்க மாவட்டத்திற்கு இருவர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் அரசியல் கள நிலவரம், மக்கள் பிரச்சனைகள் உள்ளிட்டவற்றை நேரடியாக ஆய்வு செய்து, ஆகஸ்ட் 15ம் தேதிக்கு முன்பாக அறிக்கை அளிக்கும் படி கட்சி தலைமை, நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாம்.
எதிர்க்கட்சிகள் கண்டிப்பாக சட்டப்பிரிவு 370 ஐ கையில் எடுத்து தான் பாஜக.,விற்கு எதிரான பிரச்சாரத்தை முன்வைப்பார்கள். அதனால் அதே சட்டப்பிரிவு 370 ல் தங்களுக்கு சாதகமான விஷயங்கள் என்னவெல்லாம் உள்ளது என்பதை பற்றிய தகவல் சேகரிக்க தான் இந்த கள ஆய்வு ஏற்பாடு நடத்தப்படுகிறதாம். இந்த அறிக்கைகளில் அடிப்படையில் தான் காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக தயார் செய்ய போகிறதாம்.
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}