PMK infighting: அடம்பிடிக்கும் அப்பா-மகன்.. கூட்டணியை பலப்படுத்தப் போராடும் பாஜக

Nov 29, 2025,05:31 PM IST

சென்னை : தமிழகத்தில் இன்றைய அரசியல் நிலவரப்படி, திமுக கூட்டணி பலமாக உள்ளது. அதிமுக- பாஜக கூட்டணி கலகலத்து போய் உள்ளது. கூட்டணிக்கு வருவார்கள் என பாஜக எதிர்பார்க்கும் கட்சிகள் சிதறிக் கிடக்கின்றன. பாமகவை இணைக்க முடியாமல் அதிமுக கூட்டணி தடுமாறிக் கொண்டுள்ளதாம்.


மறுபக்கம் தவெக.,வில் இணைந்துள்ள செங்கோட்டையன், இன்னும் சில முன்னாள் அமைச்சர்களை இழுத்துக் கொண்டு போய் தவெக.,வில் இணைக்கவுள்ளதாக கூறி இருப்பது வேறு பலரையும் கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது. அதிமுக-பாஜக கூட்டணி பலப்படுத்த முடியாமல் இருப்பதற்கு பாமக மிக முக்கியமான காரணம் என சொல்லப்படுகிறது.


பாமக.,வில் அப்பா டாக்டர்.ராமதாசிற்கும், மகன் அன்புமணி ராமதாசிற்கும் இடையே மோதல் போக்கு இருப்பது அனைவருக்கும் தெரியும். இப்போது பாமக, அன்புமணிக்கே என்று தேர்தல் ஆணையம் வேறு கூறி விட்டது. இதனால் டாக்டர் ராமதாஸ் கடும் கோபமடைந்துள்ளார். என்னுடன் மோத நினைக்கிறாயா.. உன்னால் வெல்ல முடியாது. கோர்ட்டில் பார்த்துக் கொள்கிறேன். என்னுடைய உழைப்பை அபகரிக்க விட மாட்டேன் என்று ஆவேசமாக கூறியுள்ளார் ராமதாஸ். இதனால் பாமக விவகாரம் மேலும் மோசமடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.




இதைத் தாண்டியும் கட்சிக்குள் பல குழப்பங்கள் உள்ளதாம். ஒரு பக்கம் பாமக.,வின் நிறுவனர் என்ற முறையில் கட்சியில் தனது உறவினர்களை நிர்வாகிகளாக நியமித்து வருகிறார் ராமதாஸ். கட்சியின் செயற்தலைவர் என்ற முறையில் மகள் ஸ்ரீகாந்தியும் கட்சி பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். தற்போது தேர்தல் ஆணையம் ராமதாஸ் தலைமையிலான பாமகவை அங்கீகரிக்கவில்லை என்பதால் வேறு பெயரில் அவர் தற்போது தேர்தலைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. கிட்டத்தட்ட மகாராஷ்டிராவில் நடந்த கட்சிப் பிளவுகள் போலத்தான் இதுவும்.


மகாராஷ்டிராவிலும் இப்படித்தான் சிவசேனையும், தேசியவாத காங்கிரஸும் பிரிந்தன. இதனால் மூத்த தலைவர்களான சரத் பவாரும், உத்தவ் தாக்கரேவும் வேறு பெயரில் செயல்பட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர். தற்போது அதே போலத்தான் டாக்டர் ராமதாஸும் தள்ளப்பட்டு வருகிறார். 


இது போன்ற குழப்பமான நிலையில் பாமக தங்களின் கூட்டணிக்கு வர வேண்டும் என திமுக, பாஜக இரண்டு கட்சிகளும் மும்முரம் காட்டுவதாக சொல்கிறார்கள். ராமதாஸ் உடன் திமுக தொடர்ந்து பேசி வருவதாக சொல்லப்படுகிறது. அன்புமணி உடன் அதிமுக கூட்டணி பேசி வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அப்பா-மகன் இருவரும் தனித்தனி கூட்டணியில் போட்டியிட்டால் ஓட்டுக்கள் பிரிந்து, அது திமுக.,வின் வெற்றிக்கு வழிவகுத்து விடும் என்பதால், அப்பா-மகன் இருவருமே தங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என நினைக்கிறதாம் பாஜக.


ஆனால் அன்புமணி விவகாரத்தில் தேர்தல் ஆணைய செயல்பாடுகளால் கடும் கோபத்தில் இருக்கிறாராம் ராமதாஸ். இதனால் அவர் பாஜகவுக்கு பச்சைக் கொடி காட்டுவாரா என்பது சந்தேகம் என்று சொல்கிறார்கள். வரும் தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிட்டு தனது பலத்தை அவர் பரீட்சித்துப் பார்க்கலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.  அன்புமணி விவகாரத்தில் பாஜக தனக்கு சாதமாக நடக்கவில்லையே என்ற வருத்தமும் ராமதாஸுக்கு இருப்பதாக சொல்கிறார்கள்.


அப்பா-மகன் இருவரையும் சமாதானப்படுத்த பாஜக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறதாம். ஆனால் நான் வேண்டுமா? அவர் வேண்டுமா? என இருவருமே கேட்டு வருகிறார்களாம். ஆனால் இருவருமே வேண்டும் என்று பாஜக நினைக்கிறதாம். அது மட்டுமல்ல ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இருவருமே, தாங்கள் பாஜக கூட்டணிக்கு வர வேண்டும் என்றால் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட தனக்கு 23 சீட், ஒரு ராஜ்யசபா சீட் வேண்டும் என்று கேட்டு வருகிறார்களாம். இருவருக்கும் தலா 23 சீட் என்றால் பாமக.,விற்கு மட்டும் 46 சீட் ஒதுக்கும் படி வரும். அப்படி ஒதுக்கினால் மற்ற கட்சிகளுக்கு சீட் ஒதுக்குவது சிக்கலாகி விடுமே என பாஜக தலைசுற்றி போய் இருக்கிறதாம்.


அப்பா-மகன் இருவரையும் சமாதானப்படுத்தி, பாமக.,விற்கு ஒரு குறிப்பிட்ட சீட் ஒதுக்கி, அதற்கு இருவரையும் சம்மதிக்க வைக்க பாஜக தலைமை போராடி வருகிறதாம். இவர்கள் இருவருமே தங்கள் நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருப்பதால் மற்ற கட்சிகளுடன் கூட்டணி, தொகுதிகள் குறித்த பேச்சை நடத்தி, இறுதி செய்ய முடியாத நிலையில் பாஜக உள்ளதாம். இது தான் பாஜக-அதிமுக கூட்டணி இதுவரை வடிவம் பெறாமல் இருப்பதற்கு ஒரே காரணம் என சொல்லப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சபரிமலை மகரஜோதி தரிசனம் 2026...சாமியே சரணம் ஐயப்பா...சரண கோஷம் விண்ணை பிளக்க பக்தர்கள் பரவசம்

news

பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு-இடை நிலை ஆசிரியர்களுக்கு விரைவில் நற்செய்தி-அமைச்சர் தகவல்

news

அதிமுக நேர்காணல்...சென்னை நிர்வாகிகளை வறுத்தெடுத்த இபிஎஸ்

news

ராகுல் காந்தியின் ‘ஜனநாயகன்’ ஆதரவு ட்வீட்: உறுதியாகிறதா காங்கிரஸ்-தவெக கூட்டணி?

news

விஜய்யை சாதாரணமாக எடை போட முடியாது... விஜய்க்கு தனி கூட்டம் உள்ளது: அண்ணாமலை

news

பொங்கலுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை: வானிலை மையம் தகவல்!

news

மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பராசக்தி படக்குழுவினர்

news

சென்னையைச் சுற்றிப் பார்க்க 'சென்னை உலா': புதிய சுற்றுலாப் பேருந்து சேவை தொடக்கம்!

news

லீக்கான கூட்டணி பிளான்...நெருக்கடியில் டிடிவி தினகரன்

அதிகம் பார்க்கும் செய்திகள்