சென்னை: புது அடிமைகள் கிடைக்குமா என பாஜக தேடுகிறது. எத்தனை அடிமைகள் வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலில் தவெக கட்சி தனித்து தான் போட்டியிடும் என்று விஜய் திட்டவட்டமாக தெரிவித்து வந்தார். அதன்படி தான் விஜய்யும் பல்வேறு கட்சிப்பணிகளையும் செய்து வந்தார். மேலும் காங்கிரஸ் கட்சியுடன் விஜய் கூட்டணி வைக்க பேசி வருவதாகவும் தகவல்கள் பரவி வந்தது.
இந்நிலையில் கரூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் பூதாகரமாக உருவெடுத்தது. இதனையடுத்து விஜய்க்கு ஆதரவாக பாஜக குரல்கொடுத்து வந்தது. இதனால், பாஜகவுடன் விஜய் கூட்டணியில் இணைய உள்ளதாகவும் பல விதமாக கருத்துக்கள் பரவி வருகிறது. இது மட்டும் இன்றி அதிமுகவுடன் விஜய் கைகோர்க்க தற்போது பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திண்டுக்கலில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், பாஜகவுக்கு அடிமையாக அதிமுக கிடைத்துள்ளது. புதிய அடிமைகள் கிடைக்குமா என பாஜக தேடுகிறது. பாஜகவுக்கு புதிய அடிமைகள் கிடைக்கட்டும். எத்தனை அடிமைகள் வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது. கை நம்மை விட்டு எங்கும் போகாது. எனது கையை சொன்னேன் வேறு எதையும் நினைக்காதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.
சபரிமலை மகரஜோதி தரிசனம் 2026...சாமியே சரணம் ஐயப்பா...சரண கோஷம் விண்ணை பிளக்க பக்தர்கள் பரவசம்
பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு-இடை நிலை ஆசிரியர்களுக்கு விரைவில் நற்செய்தி-அமைச்சர் தகவல்
அதிமுக நேர்காணல்...சென்னை நிர்வாகிகளை வறுத்தெடுத்த இபிஎஸ்
ராகுல் காந்தியின் ‘ஜனநாயகன்’ ஆதரவு ட்வீட்: உறுதியாகிறதா காங்கிரஸ்-தவெக கூட்டணி?
விஜய்யை சாதாரணமாக எடை போட முடியாது... விஜய்க்கு தனி கூட்டம் உள்ளது: அண்ணாமலை
பொங்கலுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை: வானிலை மையம் தகவல்!
மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பராசக்தி படக்குழுவினர்
சென்னையைச் சுற்றிப் பார்க்க 'சென்னை உலா': புதிய சுற்றுலாப் பேருந்து சேவை தொடக்கம்!
லீக்கான கூட்டணி பிளான்...நெருக்கடியில் டிடிவி தினகரன்
{{comments.comment}}