மதுரை: தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளே மிரண்டு போகும் வகையில் பாஜக அசுர வளர்ச்சி அடைந்துள்ளது என்று பாஜகவின் மாநில அமைப்புச் செயலாளரான கேசவ விநாயகம் கூறியுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை ஜெயலலிதா மறைவுக்கு முன்பு வரை திமுக - அதிமுக என்ற இரு கோணத்தில்தான் இருந்து வந்தது. மற்ற கட்சிகள் எல்லாம் இவர்களில் யாருடனாவது கூட்டணியில் இருப்பார்கள்.

இவர்களைத் தாண்டி, இவர்களுக்குப் போட்டியாக, இவர்களையே மிஞ்ச வேண்டும் என்ற நோக்குடன், தனிப் பெரும் சக்தியாக வளரத் துடித்த ஒரே கட்சி தேமுதிக மட்டுமே. ஆனால் அந்தக் கட்சியையும் கூட ஜெயலலிதா சாதுரியமாக சாய்த்து வீழ்த்தி பலவீனமாக்கி விட்டார். இது வரலாறு.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக பல துண்டுகளாக சிதறியது.. சசிகலா தலைமமையில் ஒரு அணி, ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணி என முதலில் உடைந்தது. பின்னர் தினகரன் தனித்துப் பிரிந்தார். ஆக அதிமுக இப்போது வலுவான கட்சியாக இல்லை. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இருப்பதுதான் சட்ட ரீதியான அதிமுக என்றாலும் கூட, அது திமுகவை எதிர்த்து வீழ்த்தும் அளவுக்கு பலமாக இருப்பதாக தெரியவில்லை.
இந்த நிலையில் மதுரையில் நடந்த பாஜக பூத் கமிட்டிக் கூட்டத்தில் பேசிய கேசவவிநாயகம் பல முக்கிய விஷயங்களைப் பற்றி பேசினார். அவர் பேசும்போது, திமுக மீது மக்கள் அதிருப்தி, வெறுப்பில் உள்ளனர். அதிமுகவைத் தேட வேண்டியுள்ளது. பாஜக நல்ல வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்தக் கட்சிகளே பார்த்து மிரளும் அளவுக்கு நாம் வளர்ந்திருக்கிறோம். எனவே நாம் கவனமாக இருந்து வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வெல்ல வைக்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதாவது திமுக மீது மக்களுக்கு அதிருப்தி உள்ளது.. அதிமுகவைக் காணவில்லை என்பதே கேசவவிநாயகம் விடுத்துள்ள ஸ்டேட்மென்ட். சரி உண்மை நிலவரம் என்ன?
அதிமுக ஒரே கட்சியாக இல்லை.. பலவீனப்படுத்தப்பட்டு விட்டது.. அது மேலும் பலவீனப்படுத்தப்படும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளன. அதிமுக - பாஜக கூட்டணியுடன் தேர்தலை சந்தித்தால்தான் நல்லது.. தனித்து போட்டியிட்டால் மிகப் பெரிய இழப்பு ஏற்படும் என்று அனைத்து அரசியல் நோக்கர்களும் கூறி வருகின்றனர். மறுபக்கம், திமுக, தன்னை நோக்கி வீசப்படும் விமர்சனங்கள், ரெய்டுகள், எதிர்ப்புகள் என எதையும் பொருட்படுத்தாமல் மக்கள் நலத் திட்டங்களை அறிவிப்பதிலும், அதை அமலாக்குவதிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
திமுக அரசின் இந்தத் திட்டங்கள் மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. திமுக அரசுக்கு எதிராக பாஜக ஏவும் எல்லா அஸ்திரங்களுமே தோல்வியில்தான் முடிந்துள்ளன என்பதை அந்தக் கட்சியினரே கூட ஒப்புக் கொள்வார்கள்.. காரணம், திமுக எந்த வகையிலும் இதுவரை நிலைகுலைந்து போனதாகத் தெரியவில்லை. திமுக அரசுக்கும் இதுவரை எந்த பெரிய சிக்கலும் எழவில்லை.

நிலைமை இப்படி இருக்கையில் எதிர்க்கட்சிகள் மிரண்டு போகும் அளவுக்கு பாஜக வளர்ச்சி அடைந்துள்ளது என்று எந்த கணக்கின் அடிப்படையில் கேசவ விநாயகம் கூறுகிறார் என்று தெரியவில்லை. ஆனால் அவர் ஒரு மூத்த ஆர்.எஸ். எஸ். தலைவர் என்பதால் அவரும் ஏதாவது ஒரு கணக்கின் அடிப்படையில்தான் இதைக் கூறியிருக்க முடியும். ஆனால் அவர் சொன்னது போல திமுக, அதிமுக மிரண்டு போயுள்ளதா, அது உண்மையா என்பதை அறிய நாம் வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரை காத்திருக்க வேண்டும்.
ஆட்சிக்கு வந்த 1728 நாட்களில் 4000 திருக்கோயில் குடமுழுக்குகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!
தனியா.. கெத்தா.. மாமல்லபுரத்தில் சொன்னது போல நடக்கப் போகிறாரா விஜய்?
ராகுல் காந்தி - கனிமொழி திடீர் சந்திப்பு ஏன்? பின்னணி நடக்கும் பரபரப்பு அரசியல்
எந்த பக்கம் செல்வது?...முடிவு எடுக்க முடியாமல் தவிக்கும் மூவர்...யாருக்கு என்ன பிரச்சனை?
விஜய் உடன் சேர்ந்தால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்...ஆரூடம் சொல்லும் எஸ்ஏசி
இன்று முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை மையம்
திருக்கோயில் சொத்துகளைத் திருடும் கொள்ளை மாடல் அரசு எப்போது திருந்தும் : நயினார் நாகேந்திரன் கேள்வி!
எப்படி இருந்த செங்கோட்டையன் இப்படி ஆகிவிட்டாரே: நயினார் நாகேந்திரன்
நகைப்பிரியர்களுக்குப் பேரதிர்ச்சி: ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்த தங்கம் விலை!
{{comments.comment}}