டெல்லி: திடீர் உடல்நலக்குறைவு காரணமாக பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை ஸ்திரமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி 1999-2004 வரை மத்திய உள்துறை அமைச்சராகவும், 2002-204 வரை துணைப் பிரதமராகவும் பதவி விகித்தவர். தற்போது அவருக்கு 97 வயதாகிறது. தீவிர அரசியலை விட்டு வெகு காலத்திற்கு முன்பே விலகி விட்ட அவர் ஓய்வில் இருந்து வருகிறார்.
அத்வானிக்கு கடந்த ஜூலை மாதம் சிறுநீரக தொடர்பான தொற்று ஏற்பட்டிருந்தது. அப்பொழுது மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதன்பின்னர் உடல்நிலை சீரான நிலையில் வீடு திரும்பினார். அதன்பின்னர் ஒரிரு நாளில் மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன்பின்னர் அவ்வப்போது மருத்துமனைக்கு போவதும் வீட்டிற்கு வருவதுமாக இருந்து வருகிறார். தற்போது அவருடைய உடல்நிலை சீராக உள்ளதாகவும்,அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் மருத்துவமனைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
படத்தில் வில்லன்...நிஜத்தில் ஹீரோ...வெள்ளம் பாதித்த மக்களுக்காக ஓடி வந்த சோனு சூட்
வெனிசுலா விவகாரம்...டிரம்ப்க்கு அமெரிக்க கோர்ட் கொடுத்த அடுத்த குட்டு
அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்: ஏ.ஆர். ரகுமான்
மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை.. மழைநீரும் வடிந்த பாடில்லை.. எடப்பாடி பழனிச்சாமி
உட்கட்சி பூசல்களை சரி செய்க...தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை
விராட் கோலிக்கு லண்டனில் உடல் தகுதி தேர்வு நடத்த அனுமதி
பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவிப்பு
திருமண நிகழ்வுகள், வேலைகள் இருப்பதால் செல்லவில்லை... டெல்லி செல்லாதது குறித்து அண்ணாமலை விளக்கம்!
அன்புமணிக்கு செப்.,10 ம் தேதி வரை மீண்டும் அவகாசம் : டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
{{comments.comment}}