ரஜினிகாந்துடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு: காரணம் இது தானா?

Jun 16, 2026,03:37 PM IST

சென்னை: தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று திடீரென சந்தித்துப் பேசியுள்ளார். சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பில், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்ததாகத் தெரிகிறது.


ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என்று அறிவித்த பிறகு, தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தாலும், முக்கிய அரசியல் தலைவர்கள் அவரைச் சந்திப்பது தொடர் கதையாகவே உள்ளது. இந்த நிலையில், தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்ற பிறகு, ரஜினிகாந்தை நேரில் சந்திப்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.


எதற்காக இந்த திடீர் சந்திப்பு என செய்தியாளர்கள் நயினார் நாகேந்திரனிடம் கேட்டதற்கு, "இது முற்றிலும் ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு. இந்தியாவின் நீண்ட கால பிரதமராக பிரதமர் நரேந்திர மோடி இருந்து வருகிறார்கள். கடந்த 12 ஆண்டு கால ஆட்சியில் அவர் செய்த சாதனைகளை ஒரு புத்தகமாக தொகுத்துள்ளோம். அதை அளிப்பதற்காக தான் வந்தோம் என்றார். இந்த சந்திப்பின் போது அரசியல் ஏதாவது பேசப்பட்டதா என்ற கேள்விக்கு சிரித்தபடியே, அரசியல் ஏதும் பேசப்படவில்லை என கூறி விட்டு சென்றார். 




இருப்பினும் நயினார் நாகேந்திரனுடன் பாஜக டில்லி மேலிட பொறுப்பாளர்கள் சிலரும் வந்து ரஜினிகாந்த்தை சந்தித்து விட்டு சென்றுள்ளதால், இந்த சந்திப்பு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. வழக்கமாக அரசியல் தலைவர்களுடனான சந்திப்பிற்கு, முக்கிய முடிவுகள் மற்றும் ஆலோசனைகள் நடத்துவதற்காக தான் மேலிட பொறுப்பாளர்கள் வருவார்கள். இப்போது ரஜினியை பாஜக மேலிட பொறுப்பாளர்கள் சந்தித்திருப்பதால் விரைவில் பல அதிரடி அறிவிப்புகள், திருப்பங்கள் தமிழக அரசியலில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று இருதரப்பிலும் கூறப்பட்டாலும், தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழல், வரவிருக்கும் தேர்தல்கள் மற்றும் முக்கிய சமூகப் பிரச்சினைகள் குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டிருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். "ரஜினிகாந்திற்கு தமிழக மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கும், நற்பெயரும் எப்போதுமே மாறாத ஒன்று. அவரிடம் நல்வாழ்த்துப் பெறுவது என்பது அரசியல் தலைவர்களுக்கு ஒரு முக்கிய நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது." பாஜகவின் தேசியத் தலைமைக்கும் ரஜினிகாந்திற்கும் இடையே எப்போதும் ஒரு சுமுகமான உறவு இருந்து வரும் நிலையில், தமிழக பாஜக தலைவரின் இந்த திடீர் சந்திப்பு, தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதங்களையும், பரபரப்பையும் கிளப்பியுள்ளது.


முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கவுள்ளார். நடிகர் ராகவா லாரண்ஸும் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். இவர்கள் இருவருமே சமீபத்தில் ரஜினிகாந்த் பெயரைக் குறிப்பிட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து தனது பெயரை யாரும் அரசியலுக்காக பயன்படுத்தக் கூடாது என்று ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்த நிலையில் பாஜக தலைவர்கள் ரஜினியை சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திருச்சி கிழக்கில்.. முதல்வர் விஜய்யின் வெற்றியை எதிர்த்து திமுக சார்பில் வழக்கு

news

ADMK loses another MLA: அதிமுக எம்எல்ஏ. பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர்

news

ரஜினிகாந்துடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு: காரணம் இது தானா?

news

தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு

news

"குதிரை பேரத்திற்கு ஆதாரம் உள்ளதா?" - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.. தீர்ப்பு தள்ளிவைப்பு!

news

திமுக இப்படியே பேசிக் கொண்டிருந்தால்.. எதிர்க்கட்சி அந்தஸ்தும் கிடைக்காது.. காங். அமைச்சர்கள்

news

கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி - முதல்வர் விஜய் அறிவிப்பு!

news

திமுக அதிமுக.,வை இணைக்க பார்த்தது தேமுதிகவா?.. அதிர்ந்த களம்...உண்மையை உடைத்த தோழர்!

news

‘மக்களின் பாதுகாப்புக்கு கால்ஷீட் எப்போது?’ – முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

அதிகம் பார்க்கும் செய்திகள்