சென்னை: ஒரு பெண் அமைச்சர் முதல்வராகும் கனவுடன் டேரா போட்டவர்.. நீ வா போ என மரியாதை குறைவாக.. முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பேசிய ஒருமை வார்த்தைகள் கடும் கண்டனத்திற்குரியது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
திமுக எம்.பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, முதல்வராக ஆசைப்பட்டு நிர்மலா சீதாராமன் மூன்று மாதங்கள் தமிழகத்திலேயே தங்கி இருந்தார். அப்போது நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படும் என கூறியிருந்தார். ஆனால் இப்போது நீட் விவகாரம் தொடர்பாக எதுவும் கூறாமல், வேறு மாதிரி பேசுகிறார்.
ஜிஎஸ்டி வரி தொடர்பாக கேள்வி எழுப்பியது தவறா..? இதற்காக மிரட்டுவதும் சரியா..? அதேபோல் குஜராத்தில் மட்டும் இந்தியில் பேசினால் மரியாதை.. தமிழ்நாட்டில் மட்டும் தமிழில் பேசினால் மரியாதை இல்லையா என கடுமையாக விமர்சித்து இருந்தார். அவரது பேச்சுக்கு, கடும் கண்டனம் தெரிவித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
இதுதான் உங்கள் திராவிடத்தின் வளர்ப்பா திரு. தயாநிதி மாறன் அவர்களே?

நமது மத்திய அமைச்சரவையில் முக்கிய பொறுப்பில் இருக்கும், ஒரு பெண் அமைச்சரைப் பற்றி, “முதல்வராகும் கனவுடன் டேரா போட்டவர்” என்ற பொய் அவதூறுகளைப் பரப்புவதும், “நீ, வா, போ” என மரியாதையும் நாகரிகமுமின்றி பொதுவில் ஒருமையில் பேசுவதும் கடும் கண்டனத்திற்குரியது.
ஒரு பெண் அரசியலிலும் அதிகாரத்திலும் வளர்ந்து வந்தால், நீங்களும் உங்கள் கட்சிக்காரர்களும், கூட்டணிக் கட்சித் தலைவர்களும், உங்கள் கூலிப்படைப் பேச்சாளர்களும் அவர்களை எத்தனை கீழ்த்தரமாக விமர்சிக்கவும் தயங்க மாட்டீர்கள் என்பதை நாங்கள் கண்டிருக்கிறோம்.
ஆனால், நமது மத்திய நிதியமைச்சரான திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்களைப் பற்றி, நீங்களும் உங்கள் கூட்டணிக் கட்சித் தலைவரான திரு. ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களும் மாறி மாறி சர்ச்சைக்குரிய கருத்துக்களால் காழ்ப்புடன் விமர்சிக்கிறீர்களே, இதுதான் திராவிடத்தின் கொள்கையா? இதைத்தான் இண்டி கூட்டணியே தங்கள் கொள்கையாக முழங்குகிறீர்களா?
ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள உங்களுக்கு, முதல் பெண் பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவி வகித்த நமது மத்திய நிதியமைச்சரைப் பற்றி பேச குறைந்தபட்ச தகுதியாவது இருக்கிறதா?
எனவே, அரசியலில் வளர்ந்து வரும் பெண்களையும், அதிகாரத்தில் மிளிரும் பெண்களையும் கண்டு அஞ்சி, பொறாமையில் பொங்கி இப்படி மட்டமான கருத்துக்களால் விமர்சிப்பதை விட்டுவிட்டு, உங்கள் கட்சியனருக்கே பழக்கமில்லாத “நாகரிக அரசியலை” நீங்களாவது முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம் என கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தண்ணீர் திறந்தது கர்நாடகா : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
"தனிமைப்பட்டு நிற்கிறார் CM" – காவிரி விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறைகேடு? - திமுக என்.ஆர்.இளங்கோ பரபரப்பு பேட்டி!
ஒற்றுமையின்றி செயல்படுபவர்களுக்கு கட்சியில் இடமில்லை : ராகுல் காந்தி எச்சரிக்கை
கபிணி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. போராட்டக்காரர்களுக்கு டி.கே.சிவக்குமார் எச்சரிக்கை
வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.200 குறைவு: ஓட்டல் உரிமையாளர்கள் நிம்மதி!
வேளாண் பட்ஜெட் 2026: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்த அமைச்சர் வினோத்!
கட்டணச்சலுகை இல்லாவிட்டாலும் UDID அட்டை இருந்தால் சிறப்பு பெட்டிகளில் பயணிக்கலாம்!
தோப்பு வெங்கடாசலம் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிப்பு: திமுக தலைமை அதிரடி அறிவிப்பு!
{{comments.comment}}