சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நேரடியாக பேசினாலே போதும். கூட்டணி அமைந்துவிடும். கூட்டணிக்காக ஐடி ரெய்டு மூலம் பணிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறியுள்ளார் தமிழ்நாடு பாஜகவின் சட்டசபைக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன்.
கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும், 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. இதில் 2019 தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே கூட்டணிக்கு வெற்றி கிடைத்தது. அதுவும் அதிமுக மட்டுமே வென்றது. 2021 சட்டசபைத் தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவி ஆட்சியையும் இழந்தது. இதையடுத்து இரு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணி உடைந்தது.
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி இரண்டாகப் பிரிந்து தனித்தனியாக போட்டியிட்டது. இதில் இரண்டு அணிகளுமே ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் கடும் தோல்வியை சந்தித்தது. அந்த சமயத்தில் எப்போதும் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்க போவதில்லை என எடப்பாடி பழனிச்சாமி தீர்மானமாக அறிவித்திருந்தார்.

இருந்தாலும் கூட அதிமுக பாஜக இடையே மறைமுக கூட்டணி என அமைத்திருப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகளும் காரசாரமாக விவாதித்து வருகிறனர். அதிமுக தரப்பி்ல ஜெயக்குமார்தான், கூட்டணி தொடர்பாக எப்போதுமே பதில் கூறி வருகிறார். இந்த நிலையில் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி சேர பாஜக தரப்பில் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். சமீபத்தில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் அதிமுகவுடன் கூட்டணியில் சேர விருப்பம் இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் பாஜக குழு தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று திருநெல்வேலி சென்றபோது செய்தியாளர்கள் சீமானின் பெரியார் குறித்த விவாதங்கள், திருநெல்வேலியின் ஸ்மார்ட் சிட்டி, சட்டசபையில் எதிர்க்கட்சியின் கோரிக்கை நிறைவேற்றப்படுகிறதா..? என பல்வேறு கேள்விகள் ரகேட்டனர். மேலும் ஐடி சோதனை மூலம் எடப்பாடி பழனிச்சாமியை மிரட்டி அதிமுகவுடன் கூட்டணி உருவாகிறதா..? என்ற கேள்விக்கு, அவர் பதிலளிக்கையில், வருவான வரித்துறை சோதனை என்பது யார் வீட்டில் பணம் இருக்கிறதோ அவர்கள் வீட்டில் தான் நடைபெறும். திமுக பக்கம் கூட சோதனை நடக்கிறது. ஏன் உங்கள் வீட்டில் பணம் இருந்தால் கூட உங்கள் வீட்டிலும் ரெய்டு வரும். ரெய்டு மூலமாக பணிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்கும் கூட்டணி வற்புறுத்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமியுடன் பாஜக நேரடியாக பேசினாலே போதும். கூட்டணி அமைந்து விடும். ஐடி சோதனை மூலம் பிற கட்சியை மிரட்டி கூட்டணி சேர வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை என பதில் அளித்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சென்னையில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
ஜூன் 22.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் .. புதிய குடும்ப அட்டைகள் விநியோகிக்க திட்டம்!
பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை
தமிழக அரசு குதிரை பேரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது: கனிமொழி கடும் விமர்சனம்!
"இந்திரா காந்தி இருந்திருந்தால் பாஜக-விற்கு தடை விதித்திருப்பார்" - அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு
4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்...அதிமுக மனு விசாரணைக்கு ஏற்பு
"எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?" - எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அக்கறை காட்ட வேண்டும்! உதயநிதி ஸ்டாலின் காட்டம்
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!
{{comments.comment}}