மு.க.ஸ்டாலின் போன கமலாலயம்.. அவர் கொடுத்த "பன்ச்"சை.. அவருக்கே திருப்பிக் கொடுத்த பாஜக!

Feb 22, 2023,12:42 PM IST
சென்னை: திருவாரூர் கமலாலயம் குளத்திற்குப் போன முதல்வர் மு.க.ஸ்டாலின் அதுகுறித்து ஒரு புகைப்படம் போட்டார்.. அதற்கு தனது பாணியில் பாஜக பதில் கொடுத்துள்ளது.



முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் போயிருந்தார். அப்போது அங்குள்ள புகழ்பெற்ற கமலாலயம் குளத்திற்குப் போன அவர் அங்கு அமர்ந்து மலரும் நினைவுகளில் மூழ்கினார். இதுகுறித்த புகைப்படங்களையும் அவர் போட்டுள்ளார்.



அதில் ஸ்டாலின் கூறுகையில்,  கலைஞர் வளர்ந்த திருவாரூரில் உள்ள கமலாலயம், கடல் போலத் ‘தோற்றமளிக்கும்’. ஆனாலும் அது குளம்தான். அதன் ‘நடுவண்’ கோயில் படிக்கட்டுகளை அடைவதற்கான எதிர்நீச்சலை நெஞ்சுக்கு நீதியில் விளக்கியிருப்பார் தலைவர்.  இன்று அந்தப் படிக்கட்டுகளில் அமர்ந்து மகிழ்ந்தபோது, குளத்தின் அலைகளில் என் சிறு வயது நினைவுகள். நெஞ்சத்தில் என்றும் நினைவலைகளாக முத்தமிழறிஞர் என்று கூறியிருந்தார் மு.க.ஸ்டாலின்

ஸ்டாலின் போட்ட இந்த டிவீட்டுக்கு தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது பாணியில் கலகலப்பான பதில் கொடுத்துள்ளார். அவர் போட்டுள்ள பதில் டிவீட்:

'கமலாலயம்' ஒரு கோவில் தான். படிக்கட்டுகளில் அமர்ந்து பாற்கடல் போல் குளம் தோற்றமளிப்பதற்கு காரணம் 'நடுவண்' அரசை திருமாலை போல் காத்து கொண்டிருக்கும்  பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தான். அக் குளத்தில் மிதந்து வரும் நடுவண் அரசின் திட்டங்கள் என்ற அலைகளை படிக்கட்டுகளில் அமர்ந்து மகிழ்கிறீர்கள் என்று அதில் போட்டுள்ளார் நாராயணன் திருப்பதி.

ஸ்டாலின் கமலாலயம் குளத்தைப் பற்றி சொல்லி கூடவே "நடுவண்" அரசுக்கும் ஒரு பன்ச் வைத்திருந்தார்.. ஆனால் அந்த "பன்ச்"சை வாங்கி அவருக்கே திருப்பி விட்டுள்ளார் நாராயணன் திருப்பதி.. இப்படி ஆரோக்கியமாக "மோதிக்" கொண்டால் நல்லாத்தான் இருக்கு.. எல்லோரும் இப்படி டீசன்ட்டாக சண்டை போடலாமே!

சமீபத்திய செய்திகள்

news

தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!

news

எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!

news

நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

அதிகம் பார்க்கும் செய்திகள்