டில்லி : பெண்களின் ஓட்டுக்களை குறிவைத்து, அவர்களின் ஓட்டுக்களை முழுவதுமாக கவரும் நோக்கத்துடன் தங்களின் 2024 லோக்சபா தேர்தல் பணிகளை துவங்கி உள்ளது பாஜக. தங்கள் அரசின் 10 ஆண்டு கால சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்கவும் பாஜக திட்டமிட்டுள்ளது.
டில்லியில் பாஜக.,வின் தேசிய கவுன்சில் மாநாடு பிப்ரவரி 17ம் தேதி நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் துவங்கியது. இரண்டு நாள் மாநாட்டின் ஒரு பகுதியாக பாஜக ஆளும் மாநில முதல்வர்களின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில் தேர்தல் பணிகள் குறித்தும், தேர்தலில் கையாள வேண்டிய யுக்திகள் பற்றியும் பாஜக ஆலோசனை நடத்த உள்ளது. தங்களின் 10 ஆண்டு கால சாதனையை சொல்லி மக்களிடம் ஓட்டு கேட்பதையும், பெண் வாக்காளர்களின் ஓட்டுக்களை குறிவைத்தும் தேர்தலை எதிர்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

முன்னதாக நேற்று இரண்டு நாள் தேசிய மாநாட்டை துவக்கி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி பேசிய முக்கியமான அம்சம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவரது பேச்சின்போது குறிப்பிடுகையில், பெண்களை வெறும் ஓட்டுக்களாக மட்டும் பார்க்காதீர்கள். அவர்கள் நம்முடைய தாய், சகோதரிகள். அவர்கள் தங்களின் ஓட்டுக்கள் மூலம் நமக்கு அளிக்கும் ஆதரவு தான் நம்முடைய கட்சிக்கு அவர்கள் தரும் ஆசிர்வாதம். 370 என்பது வெறும் எண்ணிக்கை கிடையாது. அடுத்த 100 நாட்களில் நாம் செய்ய போகும் பணி தான் வரும் லோக்சபா தேர்தலில் நம்முடைய வெற்றியின் அளவை தீர்மாக்கும் என்றார்.
மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக அரசின் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் விவசாயிகள் நலனுக்காகவும் வேளாண்மை துறைக்கும் அறிமுகம் செய்த திட்டங்கள் குறித்தும், மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியா பெற்ற பொருளாதார வளர்ச்சி பற்றியும் பட்டியலிட்டனர்.
கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் பேசிய தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, 33 ஆண்டுகளுக்கு பிறகு 2014ல் பாஜக ஆட்சியை பிடித்தது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிறகு 2019 ம் ஆண்டு தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைத்தது. இந்த முறை அதை விட அதிக பெரும்பான்மையும் வெற்றி பெறுவோம். கடந்த முறை அமோக வெற்றி பெற்றோம். இந்த முறை அதிபிரம்மாண்ட வெற்றியை பெறுவோம். 370 என்பது வெறும் இலக்கு மட்டும் தான். ஆனால் அதை விட அதிகமான இடங்களில் நாம் வெற்றி பெற போகிறோம் என தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு குறி வைக்கும் பாஜக

வழக்கம் போல் இந்த முறையும் லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க தகுதியுடைவர்களில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை தான் அதிகம். அதனால் இந்த முறை பெண் வாக்காளர்கள் தான் பாஜக.,வின் முக்கிய இலக்காக உள்ளனர். ஏற்கனவே பெண்களை கவருவதற்காக பெண்கள் முன்னேற்றத்திற்கான பல திட்டங்கள், பெண் தொழில் முனைவோருக்கு குறைந்த வட்டியில் வங்கிக் கடன், பெண் கல்விக்கு முக்கியத்துவம், மானிய விலையில் சிலிண்டர் என பல திட்டங்களை பாஜக அரசு வரிசையாக அமல்படுத்தி வருகிறது.
இப்போது தேர்தல் நெருங்க உள்ளதால், எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்பதால் அதற்கு முன்பாக நிலுவையில் உள்ள பெண்களை கவரும் திட்டங்களை பாஜக அரசு அறிவிக்க வாய்ப்புள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்புகள் வருவதற்கு மார்ச் இறுதி ஆகும் என்பதால் அதற்கு முன் மார்ச் 08ம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு இன்னும் பல அதிரடி சலுகைகளை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வாழ்க்கை ஒரு கனவா?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்
பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு
2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு
Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்
மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை
காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு
{{comments.comment}}