சென்னை: வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் விழா நடைபெற்றது போல இப்போது குஜராத்தில் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை மத்திய அரசு நடத்தவுள்ளது. பாஜக எடுத்து வைக்கும் தேர்தல் உத்திகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
2024ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதை முன்வைத்து நாடு முழுவதும் பல்வேறு முன்னெடுப்புகளில் பாஜக தீவிரமாகியுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டை இந்த முறை வென்றாக வேண்டும் என்ற தீவிரத்தில் பாஜக உள்ளது.
இதற்காக தமிழ்நாட்டு மக்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அது தொடர்ந்து வருகிறது. தமிழ், தமிழர்களின் பாரம்பரியம், சிறப்பு, பெருமை குறித்து தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் பேசி வருகிறார். அடிக்கடி தமிழ்நாட்டுக்கு மத்திய அமைச்சர்கள் வருகிறார்கள்.
தமிழ்நாட்டு திராவிட அரசியல் பாணியை பாஜகவும் கடைப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. அந்த வேலையை அண்ணாமலை சிறப்பாகவே செய்து கொண்டிருக்கிறார். இதனால் ஆளுங்கட்சியாக இருந்தும் கூட பாஜகவை சமாளிக்க முடியாமல் திமுக திணறிக் கொண்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். மறுபக்கம் சிறு சிறு வாக்கு வங்கிகளை தன் வசப்படுத்தும் வேலையிலும் பாஜக இறங்கியுள்ளது.
இருளர் சமுதாயத்தினரின் மனம் கவரும் வகையில் பாம்பு பிடிக்கும் இருவருக்கு பத்மஸ்ரீ விருது கொடுக்கப்பட்டது. அவர்களை ஆளுநரும் நேரில் சந்தித்துப் பாராட்டினார், வாழ்த்தினார். இதுபோல சிறு சிறு வாய்ப்புகளையும் கூட விடாமல் பாஜக செய்து வருகிறது.
இந்த நிலையில், வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் என்ற பெயரில் ஒரு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டிலிருந்து பலரையும் ரயில்களில் கூட்டிச் சென்று கலந்து கொள்ள வைத்தனர். இந்த விழாவில் தமிழ்நாடு அரசு சார்பில் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இருப்பினும் இந்த விழாவின் மூலம் தமிழ்நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்த பாஜக தீவிரம் காட்டியது.
அதேபோல தற்போது குஜராத்தில் சவுராஷ்டிர தமிழ்ச் சங்கமம் என்ற 10 நாள் விழாவை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. ஏப்ரல் 14ம் தேதி முதல் 24ம் தேதி வரை இது நடைபெறுகிறது. இந்த விழா நிச்சயம் தமிழ்நாட்டில் ���ாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. காரணம், தமிழ்நாட்டில் சவுராஷ்டிர வாக்கு வங்கி சற்று கவனிப்புக்குரியதாகும். குறிப்பாக தென் தமிழ்நாடு, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் சவுராஷ்டிர வாக்கு வங்கி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது.
மதுரையைப் பொறுத்தவரை சவுராஷ்டிர வாக்கு வங்கியை முழுமையாக காங்கிரஸ்தான் இதுகாலம் வரை அனுபவித்து வந்தது. அதிமுக கூட்டணியில் பெரும்பாலும் மதுரை நாடாளுமன்றத் தொகுதியை காங்கிரஸுக்கே கொடுப்பது வழக்கம். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏஜி சுப்புராமன் குடும்பத்தினர் தொடர்ந்து பல வருடம் மதுரை எம்.பியாக இருந்துள்ளனர். இவர்கள் சவராஷ்டிர வகுப்பைச் சேர்ந்தவர்கள். மதுரை நகரில் உள்ள சில சட்டசபைத் தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கக் கூடிய அளவுக்கு சவுராஷ்டிர வாக்கு வங்கி உள்ளது.
மதுரையின் பொருளாதார வளர்ச்சியில் சவுராஷ்டிர சமூகத்தினரின் பங்கும் மிக முக்கியமானது. குறிப்பாக கைத்தறித் தொழில் உள்ளிட்டவற்றில் சவுராஷ்டிர மக்களின் உழைப்பும், பங்களிப்பும் அதிகம்.
இப்படிப்பட்ட நிலையில் சவுராஷ்டிர தமிழ்ச் சங்கமம் என்ற நிகழ்ச்சியே தமிழ்நாட்டில் சவுராஷ்டிர வாக்கு வங்கியை தன் வசப்படுத்தும் பாஜகவின் திட்டமாகவே பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சவுராஷ்டிர சமூகத்தினர் பாஜக பக்கம் சாய்ந்து விட்டனர். இதை வலுப்படுத்தும் வகையில் இந்த விழா நடைபெறவுள்ளதால் அரசியல் முக்கியத்துவமும் இது பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் பங்கேற்க கீழ்க்கண்ட இணைப்பின் மூலம் இணைந்து கொள்ளலாம்.
Cabinet Reshuffle: பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்.. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்!
அமைச்சர்கள் நீக்கம்.. தானாக எடுத்தது அல்ல.. தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது.. டாக்டர் தமிழிசை
IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!
துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!
பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு.. முதல் முறையாக.. தேமுதிக பொதுக்குழு கூட்டம்.. 30ம் தேதி!
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}