சென்னை: 60களிலேயே காலாவாதியாகி விட்ட கொள்கையை தமிழ்நாட்டுக் குழந்தைகள் மீது திணிப்பது என்ன நியாயம் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கேட்டுள்ளார்.
எஸ்எஸ்ஏ நிதி வெளியீடு தொடர்பாக மத்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் கடும் மோதல் வெடித்துள்ளது. மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை ஏற்க தமிழ்நாடு அரசு மறுத்து விட்டதால் தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய பிற மாநிலங்களுக்கு மத்திய அரசு மாற்றி விட்டதாக தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்த கருத்துக்கள் கடும் விவாதங்களை எழுப்பியுள்ளன. இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினும் எச்சரிக்கை விடுத்துப் பேசியுள்ளார். இந்த பின்னணியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
முதலமைச்சர் உள்ளிட்ட தமிழக அமைச்சர்களின் மகன், மகள் அல்லது பேரன் பேத்திகள் படிக்கும் தனியார் பள்ளிகளில், மும்மொழிகள் பயிற்றுவிக்கலாம். எங்கள் வீட்டுக் குழந்தைகள் பயிலும் அரசுப் பள்ளிகளில், தமிழ், ஆங்கிலம் மற்றும் மூன்றாவது ஒரு இந்திய மொழி என மும்மொழிகள் கற்பிக்கக் கூடாதா?
திமிராகப் பேசினால்.. தமிழர்களின் தனிக் குணத்தை டெல்லி பார்க்க நேரிடும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழகம் முழுவதும் திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில், பெரும்பாலும் சிபிஎஸ்இ மும்மொழி பாடத்திட்டமே இருக்கிறது. அரசுப் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை? பணம் இருந்தால் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்று கூறுகிறாரா முதலமைச்சர்?
தற்போது 2025 ஆம் ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. இன்னும், உங்கள் 1960களின் காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது என்ன நியாயம்? என்று அண்ணாமலை கேட்டுள்ளார்.
World Letter Writing day: கஷ்டப்பட்டு கடிதம் எழுதி எத்தனை நாளாச்சு!
தாங்கி பிடிக்க தாயும் தூக்கி நிறுத்த தந்தையும் இருந்தால்!
உலக கடித தினம்.. இனிய நினைவுகளுக்கு வணக்கம்!
செம்மொழியான தமிழ் மொழியே
நம்பிக்கையின் முளை மனதில்!
கரிய நிற காகமே.. காத்திருப்பேன் உனக்காக!
செப்டம்பர் மாதம்.. செப்டம்பர் மாதம்.. 2026ம் ஆண்டின் 9வது மாதம்.. சிறப்புகள்!
பாட்டிகள் பற்றிய சுவாரஸ்யமான கட்டுரை!
அழகிய மாற்றம்!
{{comments.comment}}