சென்னை: கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தெரிவித்த கருத்துக்களைத் தொடர்ந்து பல்வேறு கேள்விகளை அவருக்கு முன் வைத்துள்ளார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை.
இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை, கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தது, மறைந்த திருமதி இந்திரா காந்தி அவர்களின் ராஜதந்திரம் என்று கூறுகிறார்.
எங்களுக்கு சில கேள்விகள்.

கடந்த 30 ஆண்டுகளில், இலங்கை அரசால், பல்லாயிரக்கணக்கான இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தான் அந்த ராஜதந்திரமா?
பலநூறு இந்திய மீனவர்கள் நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட்டனரே. அதுவும் உங்கள் ராஜதந்திரம் தானா?
மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டதால் வாழ்வாதாரத்தை இழந்தார்கள் நம் தமிழக மீனவ சொந்தங்கள். இதுவும் ராஜதந்திரத்தில் தான் அடங்குமா?
கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்தபோது, அன்று தமிழகத்தில் ஆட்சியிலிருந்த திமுக, கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுக்க முழு சம்மதம் தெரிவித்துத் தமிழக மீனவ மக்களுக்குத் துரோகம் செய்ததோடு, கடந்த ஐம்பது ஆண்டுகளாக, ஒவ்வொரு தேர்தலின் போதும், தமிழக மீனவர்கள் பாதுகாப்பு, தமிழர்கள் உரிமை, என்றெல்லாம் நாடகமாடிக் கொண்டிருக்கிறது.
அப்போதெல்லாம் இந்த ராஜதந்திரத்தைப் பற்றித் திமுக காங்கிரஸ் கூட்டணி பேசியதில்லையே ஏன்?
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை சொல்வது போலக் கச்சத்தீவைத் தாரைவார்த்தது ராஜதந்திரம் என்று ஒப்புக்கொள்வாரா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்? என்று அண்ணாமலை கேட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பேசா ஓவியம்.. ஒரு நிமிடக் கதை (37)
யானை சவாரி!
எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)
டெல்லிக்கு ராஜான்னாலும் ஆச்சி சொல்லைத் தட்டாதே !
எட்டு எட்டா மனித வாழ்வை பிரிச்சுக்கோ - ஏன் பிரிச்சு வச்சிருக்காங்க தெரியுமா?
தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??
பிரியாணிக் காதல்!
வடகிழக்கு பருவமழை: 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் மழை
தென்தமிழ் தலையங்கம்: உயிருக்குக் குறி வைத்த ஒரு சொல்.. அனோஜன் கற்றுக் கொடுத்த பாடம்!
{{comments.comment}}