சென்னை: விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ராதிகாவுக்கு எதிராக பாஜக நிர்வாகியான வேதா சுயேட்சையாக போட்டியிடுவதால் அக்கட்சிக்குள்ளையே பரபரப்பு நிலவி வருகிறது.
சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்துக் கொண்டார். இதையடுத்து அவரது மனைவி ராதிகா விருதுநகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ராதிகா சரத்குமார் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்த பின்பு வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து விருதுநகர் தொகுதியில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ராதிகா வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக நிர்வாகியான டாக்டர் வேதா என்பவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதற்காக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனிடம் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார் டாக்டர் வேதா. பாஜகவில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக ராதிகா வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், பாஜக நிர்வாகியான வேதா இன்று மனு தாக்கல் செய்திருப்பது தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து டாக்டர் வேதா செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் மதுரை மேற்கு மாவட்ட பாஜக விவசாய அணி செயற்குழு உறுப்பினராக இருக்கிறேன். திருமங்கலத்தில் மருத்துவராக பணிபுரிகிறேன். பாஜகவில் சீட் கொடுக்கவில்லை. அதனால் தான் தனி அணியாக "டெல்லி பாஜக மோடி அணி" சார்பாக நான் போட்டியிடுகிறேன்.
தமிழக பாஜக மோடி அணி சார்பாக போட்டியிடவில்லை. நான் தனி அணியாக நிற்கின்றேன். ரூல்ஸ் இருக்கு. எந்த பிரச்சனையும் இல்லை. ராதிகாவை எதிர்த்து நிற்கவில்லை. அவர்களே ஏத்துக்கிட்டாங்க. பாஜகவை எதிர்த்தும் நிற்கவில்லை. எல்லோரையும் எதிர்த்து தான் போட்டியிடுகிறேன்.
பிரதமர் நரேந்திர மோடி கேரண்டி கொடுத்ததினால தான் நான் தனியாக போட்டியிடுகிறேன். தமிழக பாஜக, டெல்லி பாஜக என ஏன் பிரிக்கிறீங்க என செய்தியாளர்கள் கேட்டதற்கு, காங்கிரசை மட்டும் இந்தியா காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் என ஆயிரம் காங்கிரஸ் ஆக பிரித்திருக்கிறார்கள். அதை ஏன் கேள்வி கேட்கவில்லை. பாஜகவில் இருந்து வரக்கூடாதா. தப்பே கிடையாது என்ன தடாலடியாக பேசினார் வேதா.
இவர் சீரியஸாக போட்டியிடுகிறாரா அல்லது வேற காரணமா என்று தெரியவில்லை.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}