சென்னை: தமிழகத்தில் 14, புதுச்சேரியில் ஒன்று என மொத்தம் 15 பேர் கொண்ட வேட்பாளர்களின் 2வது பட்டியலை வெளியிட்டது பாஜக. இதில் பாஜக சார்பில் விருதுநகர் லோக்சபா தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக வேட்பாளர்கள் 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளனர். மேலும், தாமரை சின்னத்தில் மாற்று கட்சியைச் சேர்ந்தவர்கள் 4 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.தமிழகம் மற்றும் புதுச்சேரி தொகுதிகளில் பாஜக கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜகவின் 9 வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2வது கட்ட வேட்பாளர்களின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது பாஜக. இந்த பட்டியலில் 15 பேட்பாளர்கள் இடம் பிடித்துள்ளனர்.

பாஜக 2 வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
1. விருதுநகர் -ராதிகா சரத்குமார்
2. வடசென்னை - வழக்கறிஞர் பால் கனகராஜ்
3. நாமக்கல் -கே.பி.ராமலிங்கம்
4. திருப்பூர் - ஏ.பி.முருகானந்தம்
5. சிதம்பரம் (தனி) - கார்த்தியாயினி
6. திருவள்ளூர் (தனி) - பொன்.வி.பாலகணபதி
7. திருவண்ணாமலை - அஸ்வதாமன்
8. பொள்ளாச்சி - கே.வசந்தராஜன்
9. கரூர் - வி.வி.செந்தில்நாதன்
10. நாகப்பட்டினம் (தனி) - எஸ்ஜிஎ ரமேஷ்
11. தஞ்சை - எம்.முருகானந்தம்
12. சிவகங்கை - தேவநாதன் யாதவ்
13. மதுரை - பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன்
14. தென்காசி (தனி) - பி.ஜான் பாண்டியன்
15. புதுச்சேரி - நமச்சிவாயம்
ஆகியோர் பாஜக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களாகும்.
நேற்று வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில்,
தென் சென்னை - தமிழிசை செளந்தரராஜன்
மத்திய சென்னை - வினோஜ் பி.செல்வம்
வேலூர் - ஏ.சி.சண்முகம்
கிருஷ்ணகிரி - சி.நரசிம்மன்
நீலகிரி (தனி) - எல்.முருகன்
கோவை - கே.அண்ணாமலை
பெரம்பலூர் - டி.ஆர்.பாரிவேந்தர்
தூத்துக்குடி - நயினார் நாகேந்திரன்
கன்னியாகுமரி - பொன்.ராதாகிருஷ்ணன்
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}