அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்

Dec 08, 2025,04:59 PM IST

சென்னை: பிள்ளைகள் அனைவரும் தன்னை அப்பா என்றழைக்க வேண்டும் என ஆசைப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காப்பகங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்து பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்யவேண்டு என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பக்கத்தில், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசுக் காப்பகங்களைச் சேர்ந்த சிறுமிகள் தொடர்ந்து மாயமாகி வருவதாகவும், தப்பியோடுவதாகவும் வெளியாகி வரும் செய்திகள் கடும் அதிர்ச்சியளிப்பதோடு, மிகுந்த அச்சத்தையும் நம்முள் தோற்றுவிக்கின்றன. 


ஆண்டுதோறும் போக்ஸோ வழக்குகள் பெருகிவரும் அறிவாலயத்தின் ஆட்சியில், அரசுக் காப்பகங்களில் இருந்து காணாமல் போன குழந்தைகள் பாலியல் தொழில்களுக்காகக் கடத்தப்பட்டனரா? இதில் காப்பகக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோருக்கு ஏதேனும் தொடர்பிருக்கிறதா? அல்லது காப்பகத்தின் கொடுமை தாங்காமல் குழந்தைகள் ஓடிவிட்டனரா உள்ளிட்ட பல கேள்விகள் நம் மனதை அரிக்கின்றன.




காரணம், ஒடுக்கப்பட்ட, ஆதரவற்ற குழந்தைகளை அரவணைத்துப் பாதுகாக்க வேண்டிய அரசுக் காப்பகங்கள், திமுக ஆட்சியில் அடிப்படை வசதிகள் இல்லாததாலும், தரமான உணவு வழங்காததாலும், சாதிரீதியான தாக்குதல்கள் மற்றும் பாலியல் சீண்டல்கள் பெருகிவிட்டதாலும் அச்சுறுத்தும் கூடங்களாக மாறிவிட்டன என்பதை சமீபத்திய செய்திகள் நமக்கு உணர்த்தி வருகின்றன. 


நமது பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த இவ்விவகாரத்தை அரசியல் வேறுபாடுகளைக் கடந்து நாம் சிந்திக்க வேண்டியது அவசியம். எனவே, தமிழகப் பிள்ளைகள் அனைவரும் தன்னை அப்பா என்றழைக்க வேண்டும் என ஆசைப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காப்பகங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்து பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்யவேண்டுமென தமிழக பாஜக சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

news

முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

news

சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

விடுதலை வேண்டா பசி!

news

சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!

news

காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!

news

காதல் மொழி காற்றின் வழி!

news

எல்லாம் கூறினேனே பெண்ணே!

அதிகம் பார்க்கும் செய்திகள்