டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜகவின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் முதலமைச்சர் தேர்வு செய்ய பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து டெல்லி முதல்வராக யார் அரியணையில் ஏறப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் நிலவி வருகிறது.
70 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட டெல்லியில் கடந்த வாரம் நடந்த தேர்தலில் பாஜக 48 இடங்களை வென்று ஆம் ஆத்மி கட்சியை தோற்கடித்தது. கிட்டத்தட்ட 15 வருடங்களுக்குப் பிறகு பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றி மாபெரும் வெற்றியை கண்டுள்ளது. டெல்லியில் தேர்தல் நடைபெற்று இரண்டு வாரங்கள் நிறைவடைந்த நிலையில் யார் அடுத்த முதல்வர் என்று எதிர்பார்ப்பு அங்கு நிலவி வருகிறது. முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மா டில்லியின் முதல்வராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு இன்று விடை கிடைத்துவிடும்.
ஏனெனில் டெல்லி முதலமைச்சர் தேர்வு செய்ய பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி , மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரின் அறிவுறுத்தல் படி, பாஜக எம்.பி.க்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் தேர்வு செய்யப்படும் டெல்லி முதல்வர் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகி, இதற்கான பதவியேற்பு விழா நாளை ராம்லீலா மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறதாம்.
இறைவனின் நிறம் ஐந்து!
பக்குவமாக பட்டறிவு புகுத்தி.. ஆக்கப்பூர்வ யோசனைகள் சொல்லும்.. அபூர்வப் பெட்டகங்களே!!
அண்ணா காபி சாப்டீங்களா அண்ணா.. Have a Hot Coffee!
சமையல் With ஸ்வர்ணா.. டாக்டர் மாமாவுக்குப் பிடிச்ச ராகி முருங்கை கீரை & பூ அடை!
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று!
அப்பம், அம்மா அப்பம் .. சிறார் பாடல்!
அக்டோபர் வந்தாச்சு.. இந்த மாதத்தில் என்னெல்லாம் ஸ்பெஷல் இருக்கு தெரியுமா?
வரி வட்டி திரை கிஸ்தி.. திரையில் முழங்கிய நடிப்புச் சிங்கம்.. சிவாஜி கணேசன் - !
இரவும் கனவும்!
{{comments.comment}}