கருக்கா வினோத் ஞாபகம் இருக்கா.. அவரோட தோழி செஞ்ச கொடும் காரியம்.. பாஜக நாராயணன் வேதனை!

May 22, 2024,05:44 PM IST

சென்னை: ஆளுரர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச முயன்று கைதான ரவுடி கருக்கா வினோத்தின் நெருங்கிய தோழி, இளம் மாணவிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளதாக தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். பெற்றோர்கள் தங்களது மகள்கள் யாருடன் பழகுகிறார்கள் என்பது குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


கருக்கா வினோத் என்பவர் ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச வந்து பாதுகாவலர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார். இவரை கைது செய்த போலீஸார் பின்னர் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்ஐஏ விசாரித்து வருகிறது. இந்த நிலையில் கருக்கா வினோத்தின் நெருங்கிய தோழி குறித்து பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார் நாராயணன் திருப்பதி. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:




கருக்கா வினோத் - ஆளுந‌ர் மாளிகையில் கு‌ண்டு வீசிய நபர்.  இ‌ந்த குண்டு வீச்சு குறித்த விசாரணையை தே‌சிய புலனாய்வு முகமை மேற்கொண்டு வருகிற நிலையில்,  கருக்கா வினோத்திற்கு நெருக்கமான 37 வயதான ஒரு பெண் குறித்த தகவலறிந்து அ‌ந்த பெண்ணின் வீட்டில் சோதனையிடும் போது கண்டெடுத்த ஆவணங்களின் அடிப்படையில் அப்பெண்  விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததும்,  மேலு‌ம் பலரை விபசாரத்தில் ஈடுபடுத்தியதும் தெரிய வந்ததை தொடர்ந்து மாநில விபசார தடுப்பு பிரிவுக்கு தகவல் அளித்தது. 


இந்த வழக்கின் விசாரணையில், அந்த பெண் தன் மகளின் பள்ளித் தோழிகளிடம் நெருங்கிப் பழகி, நடனம் கற்றுத்தருவதாகவும், அழகுக் கலை கற்றுத்தருவதாகவும் ஆசை காட்டி அந்த குழந்தைகளை விபசாரத்தில் ஈடுபடுத்தி சீரழித்த அவலம் வெளிப்பட்டது. குறிப்பாக ஐதராபாத்,  கோவை போன்ற நகரங்களுக்கு அந்த பெண்களை அழைத்து சென்று கட்டாய விபசாரத்தில் ஈடுபடுத்திய கொடூரம் நெஞ்சைப் பிழிகிறது. மேலும் அந்த  குழந்தைகளின் குடும்ப நிலைமையை தெரிந்து கொண்டு பண ஆசை காட்டியும், மறுத்தால் ஏ‌ற்கனவே ரகசியமாக எடுக்கப்பட்ட அந்தரங்க புகைப்படங்களை பொது வெளியில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியும் விபசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர்.


இது வரை 7 பேர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறு  குழந்தைகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய இ‌ந்த கொடூர கு‌ற்ற‌ம் மன்னிக்க முடியாதது. அந்த நபர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும். 


அவசரகதியான உலகத்தில், பொருளீட்டும் நிர்ப்பந்தத்தில் இயந்திரம் போல் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள், தங்கள் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள்  யாருடன் நட்பு கொண்டிருக்கிறார்கள் என அ‌றி‌ந்து கொள்ளாமலும், எங்கு செல்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என தெரிந்து கொள்ளாமலும், தங்களின் குழந்தைகளின் எதிர்காலத்தை தொலைத்து கொண்டிருப்பது பெரும் துயரம். 


யாரை குறை சொல்ல முடியும்? பெற்றோரையா? ஆசிரியர்களையா? அரசையா? நாம் நம்மைத் தான், நம் சமுதாயத்தைத் தான் நொந்து கொள்ள வேண்டும். நடந்துள்ளது மிகப் பெரிய கொடுமை. சமுதாய அவலம். இதை மாற்றி,  திருத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் நம்முடையது என்று அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்

news

திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்

news

விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!

news

திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!

news

NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை

news

2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!

news

திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு

news

தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!

news

மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்

அதிகம் பார்க்கும் செய்திகள்