புதுச்சேரி: புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக போட்டியிடும். அவர்கள் வேட்பாளரை அறிவிப்பாங்க என்று முதல்வர் என். ரங்கசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரியில் என். ஆர். காங்கிரஸ் - பாஜக இடையே கூட்டணி உள்ளது. கூட்டணியாக ஆட்சியும் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் லோக்சபா தேரத்லில் புதுச்சேரியில் பாஜக போட்டியிட விரும்பியது. அவர்களும் என். ஆர். ரங்கசாமியிடம் இடம் வேண்டும் என்று உரிமையோடு கேட்க, ரங்கசாமியும் சீட்டைத் தூக்கிக் கொடுத்து விட்டார். இதுதொடர்பாக என். ஆர். காங்கிரஸ் கட்சிக்குள் முனுமுனுப்பு இருந்தாலும் கூட பாஜகவிடம் தொகுதியைக் கொடுப்பதில் ரங்கசாமி உறுதியாக இருந்தார்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் ரங்கசாமி பேசும்போது, புதுச்சேரியில் யார் போட்டியிடுகிறார்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரியில் நாடாளுமன்றத் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது என்றார்.
வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு, அவர்கள் அறிவிப்பாங்க என்றார் ரங்கசாமி. இதுதொடர்பாக உங்களுடன் ஆலோசிக்கப்பட்டதா என்று செய்தியாளர்கள் மேலும் கேட்டபோது, அறிவிப்பாங்க என்று மட்டுமே முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி பாஜக வேட்பாளர் யார்?
புதுச்சேரியில் பாஜக சார்பில் போட்டியிடப் போவது யார் என்பதில் சஸ்பென்ஸ் நிலவுகிறது. புதுச்சேரி துணை நிலை ஆளுநராக உள்ள டாக்டர் தமிழிசைதான் போட்டியிடப் போவதாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் அதை அவர் மறுத்து வருகிறார். அப்படியெல்லாம் இல்லப்பா என்று தொடர்ந்து கூறி வருகிறார். இருப்பினும் நான் தேர்தலில் போட்டியிடவில்லை என்று திட்டவட்டமாக அவர் இதுவரை தெரிவிக்கவில்லை. இதனால் கண்டிப்பாக "அக்கா" போட்டியிட வாய்ப்பிருப்பதாக ஒரு பேச்சு வலுவாக அடிபடுகிறது.
அதேசமயம் முதல்வர் ரங்கசாமியின் உறவினரும், முக்கிய அமைச்சருமான நமச்சிவாய் போட்டியிட வாய்ப்பிருப்பதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}